.

Sunday, April 8, 2007

விளையாட்டுதிடல் சேதம்: அதிமுக கவுன்சிலர் உள்பட ஐவர் கைது

புதுக்கோட்டை, ஏப். 8: புதுக்கோட்டையில் விளையாட்டுத் திடல் தடுப்புச்சுவர் இடிக்கப்பட்டது தொடர்பாக அதிமுக கவுன்சிலர் உள்பட ஐவர் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

புதுக்கோட்டை உசிலங்குளம் பகுதியில் விளையாட்டுத் திடல் ஒன்று உள்ளது. இதைச் சுற்றி நாடாளுமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து ரூ. 5 லட்சத்தில் தடுப்புச்சுவர் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. தடுப்புச் சுவர் 25 மீ. நீளத்துக்கு இடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து நகராட்சி ஆணையர் மெகபூபா கணேஷ்நகர் காவல்நிலையத்தில் புகார் செய்தார்.

காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து 31வது வட்ட அதிமுக கவுன்சிலர் குமார், அதிமுக வட்டச் செயலர் செல்வராஜ் மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த மாஸ்கோ, திருப்பதி உள்ளிட்ட 5 பேரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

2 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

ரொம்ப local newsஆ இருக்கே? சற்றுமுன்னில் இது போன்ற செய்திகள் அவசியம் தானா?

Boston Bala said...

நன்றி ரவி. எம்.பி. செய்கிற நல்ல வேலையில், உள்ளூர் எம்.எல்.சி பங்கு பெற்று கடமையாற்ற வேண்டாம். இடிக்காமல் இருக்கலாமே என்னும் வருத்தம்தான்...

-o❢o-

b r e a k i n g   n e w s...