.

Saturday, May 19, 2007

ஹைதராபாத் மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு : பலி எண்ணிக்கை 14 ஆக உயர்வு

ஹைதராபாத் சார்மினார் அருகே உள்ள மெக்கா மசூதியில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவத்தில் பலியானவர்கள் எண்ணிக்கை 14 ஆக உயர்நதுள்ளது. இதில், போலீசாரால் சுடப்பட்டு உயிரிழந்தோரின் எண்ணிக்கை 5 ஆனது. சார்மினார் அருகேயுள்ள மெக்கா மசூதியில் வெள்ளிக்கிழமை மதியம் 1.30 மணியளவில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்கள் தொழுகையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது, சக்திவாய்ந்த குண்டு வெடித்ததில் 9 பேர் பலியாயினர். சிறுவர்கள் உட்பட 40 பேர் காயமடைந்தனர். இதையடுத்து, மக்கள் அலறியடித்து வெளியேறினர்.இதைத் தொடர்ந்து, ஹைதராபாத் நகரில் கலவரம் ஏற்பட்டபோது, நிலைமையைக் கட்டுப்படுத்த போலீசார் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர். அதில், நேற்று மாலை 3 பேர் உயிரிழந்தனர். பின்னர், இந்த எண்ணிக்கையும் 5 ஆக உயர்ந்தது. இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவம் நடந்தேறிய அடுத்த சில நிமிடங்களில், போலீசாரால் வெவ்வேறு இடங்களில் இருந்து 2 வெடிகுண்டுகள் கண்டறியப்பட்டு செயலிழக்கச் செய்யப்பட்டது. இச்சம்பவத்தில் உயிரிழந்தோர் குடும்பத்துக்குத் தலா ரூ.5 லட்சமும், காயமடைந்தோருக்குத் தலா ரூ.20 ஆயிரமும் வழங்கவதாக முதல்வர் ராஜசேகர ரெட்டி அறிவித்துள்ளார்.குண்டுவெடிப்புக்குக் காரணம் நாடு முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ள இந்தக் குண்டுவெடிப்புச் சம்பவத்துக்கு ஹார்கட்-உல்-ஜிஹாதல் இஸ்லாமி என்ற அமைப்பே காரணம் என போலீசார் சந்தேகித்துள்ள நிலையில், தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.இந்நிலையில், நாடு முழுவதிலும் உள்ள கோயில்கள், மசூதிகள் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

1 comment:

Anonymous said...

கோவில் மசூதி என எங்கு குண்டு வெடித்தாலும் உடனே இஸ்லாமிய தீவிரவாதி என இந்திய போலீசார் அரிக்கைவிடுவது கடும் கண்டனத்திற்க்குறியது. இது யாரால் நிகழ்த்தப்பட்டாலும் கண்டிக்கதக்கது.
ஆனால் குறிபிட்ட ஒரு சமுதாயத்தின் மீது பழி சுமத்துவது நியாயம் இல்லை. எனவே மரியதைக்குறிய காவல்துறை இது குறித்து நேர்மையான விசாரனை மேற்கொண்டு உண்மை குற்றவாளியை கண்டு பிடித்து இரும்புக்கரம் கொண்டு தண்டிக்க வேண்டும். இத்தண்டனை யாராக இருந்தாலும் சரியே...

-o❢o-

b r e a k i n g   n e w s...