'சிவாஜி' படம் உலகம் முழுவதும் ஏப்.14-ம் தேதி வெளியாகும் என முதலில் அறிவிக்கப்பட்டது. பின்னர் மே 31-ம் தேதி வெளியாகும் என ஏவி.எம். நிறுவனம் அறிக்கை வெளியிட்டது. இந்நிலையில் தற்போது 'சிவாஜி' படம் ஜூன் 15-ம் தேதிதான் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
'சிவாஜி' படத்தை புதன்கிழமை சென்சார் போர்டு அதிகாரிகள் பார்த்தனர். அப்படத்துக்கு அனைத்து வயதினரும் காணத்தக்க வகையிலான 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
'சிவாஜி'யில் ஆட்சேபகரமான காட்சிகளோ, வசனங்களோ இடம்பெறவில்லை. சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்க்கலாம் என படத்தைப் பார்த்த அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.
சிவாஜி'க்கு புதிய சிக்கல்: 'சிவாஜி' படத்தைத் திரையரங்குகளில் வெளியிட வேண்டுமானால் படத்தின் வசூலில் 40 சதவீதத்தைத் தரவேண்டும் என புதிய படங்களைத் திரையிட திரையரங்கு உரிமையாளர்கள் புதிய நிபந்தனை விதித்துள்ளனர்.
சாய்மீரா, ரிலையன்ஸ் ஆட்லேப், சன்நெட்வொர்க் போன்ற பெரிய நிறுவனங்கள் படத்தை வாங்கி வெளியிட முன்வந்தன. ஆனால் தமிழகத்தைப் பொருத்தவரை இப்படத்தை ஏவி.எம். நிறுவனமே அனைத்து ஏரியாக்களிலும் நேரடியாக வெளியிட முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளிவந்தன.
இந்நிலையில் தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தின் செயற்குழு கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மான விவரம்:
தமிழ்த் திரைப்படத் துறையில் தற்போதுள்ள எம்.ஜி. (மினிமம் கியாரண்டி) மற்றும் எஃப்.எச் (ஃபிக்சட் ஹயர் எனப்படும் நிரந்தர வாடகை) முறைகளால் திரையரங்குகளுக்குப் பெரும் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே இனி வரும் காலங்களில் சதவீத அடிப்படையில் வசூலில் பங்கு வேண்டும் என ஒப்பந்தம் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு உதவும் வகையில் தமிழக அரசாணை 1240-ன்படி திரையரங்குகளின் நுழைவுக் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால் பல இடங்களில் அந்த அரசாணை நிறைவேற்றப்படவில்லை. எனவே அரசாணையில் அறிவித்துள்ளபடி அதிகபட்ச கட்டணம் ரூ.50, குறைந்தபட்ச கட்டணம் ரூ.10 என விண்ணப்பம் செய்யும் திரையரங்குகளுக்கு மாவட்ட ஆணையர்களே அனுமதி தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
'சிவாஜி' படத்தைக் குறி வைத்துதான் இந்த திடீர் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதா என செய்தியாளர்கள் கேட்டனர். அதற்கு சங்கத்தின் தலைவர் மு.அண்ணாமலை கூறியதாவது:
எம்.ஜி., எஃப்.எச் முறையில் திரையரங்குகள் நஷ்டத்தை சந்தித்து வருவதால்தான் இந்த முடிவை எடுத்துள்ளோம். சதவீத அடிப்படையில் என்றால் பெரிய படங்களைப் பொருத்தவரை, முதல் மூன்று வாரங்களுக்கு விநியோகஸ்தர்களுக்கு 60 சதவீதமும், திரையரங்குகளுக்கு 40 சதவீதமும் பங்கிடப்படும். அடுத்த வாரத்திலிருந்து இரு தரப்பும் தலா 50 சதவீதம் பிரித்துக்கொள்ள வேண்டும்.
இதற்கு முன்பு திரையரங்கு உரிமையாளர்கள் நஷ்டம் அடைந்தபோது ஜீ.வி., ரஜினிகாந்த், மணிரத்னம் போன்ற சிலர் மட்டுமே பணத்தைத் திருப்பித் தந்தனர். இதை எல்லாரிடமும் எதிர்பார்க்கமுடியாது என்றார்.
(தினமணி)
Saturday, May 19, 2007
'சிவாஜி' ரிலீஸ் தேதி மீண்டும் தள்ளிவைப்பு
Posted by Boston Bala at 1:07 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
12 comments:
ரஜினியோட பேரன் ஹீரோ ஆகறதுக்குள்ள 'சிவாஜி' ரிலீஸ் ஆகுமா?
ஏன் இவனுங்களுக்கு இந்த கொல வெறி???
இவனுங்களால மத்த படம் வேற வர மாட்டீங்குது... கிரிடமாவது வந்திருக்கும். தல வேற ஸ்மார்டா இருக்காரு...
Romba mukkiyam....:=(
ஏறகனவே கடுப்பாயி திருட்டு விசிடி கவர் எல்லாம் பிரிண்டு பண்ணிட்டாங்க. இன்னும் கொஞ்ச நாள் பார்ப்பார்கள் இவங்க ரிலிஸ் பண்ணாட்டி அவங்க பண்ணிடுவாங்க.
பேசாம படத்தையே தள்ளி வெச்சிறலாம். பின்னே....ஏற்கனவே ஷங்கரு படத்த எடுக்குறேன் எடுக்குறேன்னு வருசக் கணக்குல வீணடிக்கிறாரு. ரொம்பக் கொடுமையா இருக்குங்க இவங்க சொல்ற நாயம். ஒன்றர வருசம் படமெடுத்தாத்தான் படம் சிறப்பா அமையுமா? என்ன கொடுமையோடா சாமி...
//ஏறகனவே கடுப்பாயி திருட்டு விசிடி கவர் எல்லாம் பிரிண்டு பண்ணிட்டாங்க//
எங்க..எங்க?
:)
ராகவன்..
பட்ஜட் பெருசாப்போட்டத்தான் இவங்க வாங்குற சம்பளம் சின்னதாத் தெரியுமாக்கும்.
//சிறில் அலெக்ஸ் said...
//ஏறகனவே கடுப்பாயி திருட்டு விசிடி கவர் எல்லாம் பிரிண்டு பண்ணிட்டாங்க//
எங்க..எங்க?
:) //
நேத்தே வந்துடுச்சுனு கேள்விப்பட்டேன்... கொஞ்சம் தேடி பாருங்க. தெரிஞ்சா நமக்கும் சொல்லுங்க ;)
ராமதாஸின்
சதியா இருக்குமோ...:)
தினமலர்ல போயி பாருங்க
ராமதாஸின்
சதியா இருக்குமோ...:) //
:))))))))))))
Post a Comment