.

Monday, May 21, 2007

மது விலக்கை கொண்டு வருவது பற்றி கருணாநிதியுடன் ராமதாஸ் சந்திப்பு.

தமிழகத்தில் மது விலக்கை படிப்படியாக அமல் படுத்த வேண்டும் என்று முதலமைச்சர் கருணாநிதியை நேரில் சந்தித்து பாமக நிறுவனத் தலைவர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.சென்னை கோபாலபுரத்தில் உள்ள முதலமைச்சரின் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு நடந்தது. சுமார் அரைமணி நேரம் நீடித்த இந்த சந்திப்பின் போது பாமக தலைவர் கோ.க. மணியும் உடனிருந்தார்.முதலமைச்சரை சந்தித்தபின் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், மரியாதை நிமித்தமாக முதலமைச்சர் கருணாநிதியை சந்தித்ததாகவும், தமிழகத்தில் மது விலக்கை கொண்டு வருவது பற்றி அப்போது விவாதித்ததாகவும் குறிப்பிட்டார்.மது பார்களை மூடவும், டாஸ்மாக் மதுக் கடைகளை பிற்பகல் 2 மணி முதல் இரவு 8 மணி வரை மட்டுமே திறக்கச் செய்ய வேண்டும் என்று கருணாநிதியிடம் தான் வலியுறுத்தியதாக அவர் கூறினார்.இந்திய விமான ஆணையம் மூலமே விமான நிலைய விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று யோசனை தெரிவித்ததாகச் சொன்ன ராமதாஸ், நவீன வசதிகளுடன் கூடிய புதிய விமான நிலையங்களை (கிரீன் பீல்ட்) சென்னை புறநகர் பகுதியான ஸ்ரீபெரும்புதூர், ஒரகடம் பகுதியில் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்ததாகக் குறிப்பிட்டார்.இதுதவிர சில்லரை வர்த்தகத்தில் பெரிய நிறுவனங்கள் நுழைந்திருப்பது, நதிநீர் இணைப்பு விவகாரம், காவிரி, முல்லை பெரியாறு, பாலாறு பிரச்சனை உள்ளிட்ட விஷயங்கள் தொடர்பாக இருவரும் விவாதித்ததாக ராமதாஸ் தெரிவித்தார்.

1 comment:

Anonymous said...

வாழ்க மருத்துவர் அய்யா அவர்களே !

இவண்,
சிந்தை கனிமொழி..
மது எதிர்ப்பு மாதர் சங்கம்.
சென்னை

-o❢o-

b r e a k i n g   n e w s...