.

Monday, May 21, 2007

ச: தேவர் சிலை- கமுதியில் மீண்டும் பதற்றம்

மே 21, 2007

ராமநாதபுரம்: கமுதி அருகே அனுமதியின்றி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவரின் சிலை நிறுவப்பட்டதை தொடர்ந்து அப்பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது.

ராமாநாதபுரம் மாவட்டம் கமுதி அருகே கழுத்தறுவான் கிராம் மற்றும் இடிவிலகி கிராமத்தினர் முடிவு செய்து அங்கு கடந்த வாரம் அனுமதியின்றி மணி மண்டபம் கட்டி 9 அடி வெங்கல சிலையை நிறுவனர். அதற்கு திறப்பு விழா நடத்தவும் ஏற்பாடுகள் செய்தனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த வருவாய்துறை துறை அதிகாரிகள், தாசில்தார் மற்றும் அதிகாரிகள் போலீஸாருடன் அங்கு விரைந்து வந்து அனுமதியின்றி நிறுவிய தேவர் சிலை மணி மண்டபத்துக்கு பூட்டுப் போட்டு சீல் வைத்தனர். இதற்கு எதிர்ப்பு அப்பகுதியினர் அதிகாரிகளுடனும், போலீஸாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.

இதையடுத்து அங்கு வன்முறை மூளும் அபாயம் நிலவியது. இதனால் அங்கு துப்பாக்கிய ஏந்திய போலீஸார் குவிக்கப்பட்டனர். எனவே சில நாட்களாக அங்கு பதற்றம் குறைந்தது.

இந் நிலையில் இன்று முக்கியஸ்தர்களை வைத்து தேவர் சிலையை திறக்கப் போவதாக தகவல் பரவியது. இதனால் மீண்டும் அப்பகுதியில் மீண்டும் பதற்றம் உருவாகியுள்ளது. இதையடுத்து துப்பாக்கி ஏந்திய ஆயுதப்படை போலீஸார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

நன்றி :
தட்ஸ் தமிழ்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...