'வன்புணர்வுக்கு ஆளாகி நீதி கேட்டு காவல் நிலையம் வரும் பெண்களின் புகைப்படங்களை, ஊடகங்களில் வெளியிடக் கூடாது' என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது.
இந்தியப் பெணகளுக்கான தேசிய கூட்டமைப்பின்(National Federation of Indian Women) தமிழக மாநிலச் செயலாளர் கே.சாந்தகுமாரி பதிவு செய்த பொதுநல வழக்கொன்றை விசாரித்த நீதிபதி தர்மராவ் மற்றும் நீதிபதி பழனிவேலு ஆகியோர் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளனர்.
'காவல்துறையினரால் இது போன்ற புகைப்படங்களை ஊடகத்தினர் எடுக்காமல் தடுக்க முடியும். ஆனால் மனிதாபிமானமும் புரிந்துணர்வும் இல்லாமல், அவர்கள் இந்த நடவடிக்கைகளை அனுமதித்து வருகின்றனர்.' என்றும் கூறுகிறது அந்தத் தீர்ப்பு.
மேலும்: Court bars publication of pictures of rape victims - The Hindu
Sunday, June 17, 2007
வன்புணர்வுக்கு உள்ளான பெண்களின் படங்களைப் பத்திரிக்கைகளில் வெளியிடத் தடை
Labels:
சட்டம் - நீதி,
சென்னை,
பெண்கள்
Posted by பொன்ஸ்~~Poorna at 8:05 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
8 comments:
காலம் பிந்தியாவது -கொஞ்சம்- ஞானம் வந்திருக்கிறது.
சரியானத் தீர்ப்பு
//'வன்புணர்வுக்கு ஆளாகி நீதி கேட்டு காவல் நிலையம் வரும் பெண்களின் புகைப்படங்களை, ஊடகங்களில் வெளியிடக் கூடாது' என்று சென்னை உயர்நீதி மன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது//
நல்ல தீர்ப்பு!
பாதிக்கப் பட்ட பல பெண்கள் புகார் கொடுக்க முன் வராதமைக்கு இப்படி ஊடகங்கள் புகைப்படங்களை வெளியிட்டு விடும் என்ற அச்சமே காரணம்!
நீண்ட நாளாய் மனதை அரிக்கும் விதயம், இப்போதாவது செய்தார்களே இது போல் வழக்குகளில் சிக்கும் பாலியல் தொழிலாளர்களின் படத்தையும் வெளியிடக்கூடாது என்று சட்டமியற்றவேண்டும்.
நல்லதோர் தீர்ப்பு.
//மனிதாபிமானமும் புரிந்துணர்வும் இல்லாமல், அவர்கள் இந்த நடவடிக்கைகளை அனுமதித்து வருகின்றனர்//
காவல்துறைதான் பொறுப்பில்லாமல் நடந்து கொள்கிறார்கள் என்றால் ஊடகங்கள் தமது சுயலாப நோக்கங்களுக்காக எதையும் வெளியிடுவது வேதனையானது.
//வழக்குகளில் சிக்கும் பாலியல் தொழிலாளர்களின் படத்தையும் வெளியிடக்கூடாது//
பாலியல் வழக்குகளில் சிக்குபவர்களின் படங்களை வெளியிடுவதால் எதிர்காலத்தில் அவர்கள் திருந்திவாழும் சந்தர்ப்பத்தையும் இல்லாமல் செய்துவிடுகிறார்கள்.
நல்ல தீர்ப்பு, ஆனால் நடைமுறைப்படுத்த வேண்டுமே!!
நல்லதோர் தீர்ப்பு. உணமைய சொன்னா வன்புணர்வை அதிகமா பாதிக்குது அவுங்களப் பத்தின படங்களும் செய்திகளும். நிருபர்ங்க கொஞ்சம் யோசனை செஞ்சு போடவேணாமா? இது மட்டும் இல்லீங்க விசாரணை கூட பொதுவுல நடத்தாம சம்பந்தப்பட்டவங்களை மட்டுமே வெச்சு தனியா விசாரணை பண்ணினா அந்த பெண்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லே.அவுங்க வாழ்க்கையும் நல்லா இருக்கும். அதைச் செய்யுமா அரசாங்கமும் நீதித்துறையும்
"விசாரணை கூட பொதுவுல நடத்தாம சம்பந்தப்பட்டவங்களை மட்டுமே வெச்சு தனியா விசாரணை பண்ணினா அந்த பெண்களுக்கு எந்தப்பிரச்சினையும் இல்லே"
The proceedings are conducted in camera only as a matter of rule. No one except the judge, court staff, concerned advocates shall be allowed to witness the proceedings.
Post a Comment