.

Friday, June 15, 2007

"சிவாஜி" ரிலீஸ் உற்சாகத்தில் ரசிகர்கள்..

ரஜினியின் கட்டவுட்க்கு பால் அபிஷேகம் பன்னும் ரசிகர்.
சூப்பர் ஸ்டார் ரஜினியின் "சிவாஜி' திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியிருப்பதை அடுத்து, திரையரங்குகள் மட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களும் திருவிழாக் கோலம் பூண்டிருந்தன. ஆயிரக்கணக்கான ரசிகர்கள் திரையரங்குகள் முன்பு கூடியிருந்து ரஜினியின் பிரம்மாண்டமான கட் அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம், பீர் அபிஷேகம் செய்து பூசணிக்காய் உடைத்து கொண்டாடினார்கள்.ரஜினிகாந்த் நடித்து, இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் ஏவிஎம் பிரம்மாண்டமாக தயாரித்த "சிவாஜி' திரைப்படம் இன்று கோலாகலமாக வெளியாகியது. சென்னையில் மட்டும் 18 திரையரங்குகளில் ரஜினி திரைப்படம் வெளியிடப்பட்டது. இதுவரை எந்த படமும் இவ்வளவு தியேட்டர்களில் வெளியிடப்பட்டதாக சரித்திரமே இல்லை. இந்த சரித்திர சாதனையாக சென்னையில் மட்டுமல்லாமல், தமிழகம் முழுவதும் ஏராளமான தியேட்டர்களில் ரஜினி திரைப்படம் வெளியானது.வடபழனி கமலா திரையரங்கில் ரஜினியின் பிரம்மாண்டமான கட் அவுட்டுக்கு 25 லிட்டர் பாலை கொண்டு அபிஷேகம் நடைபெற்றது. ஆயிரம் வாலா பட்டாசுகள் வெடிக்கப்பட்டன. ரசிகர்கள் பொதுமக்களுக்கும், படம் பார்க்க வந்த ரசிகர்களுக்கும் லட்டு வழங்கி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்கள். ஏவிஎம் ராஜேஸ்வரி தியேட்டரில் ரஜினியின் கட் அவுட்டுக்கு பீர் அபிஷேகம் நடைபெற்றது. ரஜினியின் ரசிகர்கள் மட்டுமல்லாமல், ரசிகைகளும் ஏராளமாக திரண்டு வந்து சினிமா பார்த்தனர். ரசிகைகள் பால் குடம் போல குடங்களில் பாலை எடுத்து வந்து அவற்றை அபிஷேகம் செய்த காட்சி அனைவரையும் புல்லரிக்க வைத்தது.மேலும் சத்யம், ஆல்பட், அபிராமி உள்ளிட்ட பல்வேறு திரையரங்கு வளாகங்களிலும் ரசிகர்கள் வெள்ளம் அலைமோதியது. தமிழ்ப்படமே வெளியிடப்படாத மெலடி திரையரங்கிலும் ரஜினியின் "சிவாஜி' திரையிடப்பட்டுள்ளது. "சிவாஜி' படம் வெளியாகி உள்ள தியேட்டர்களை பார்க்கும் பொதுமக்களும் பெரும் பிரம்மிப்புக்கு ஆளாகியுள்ளனர். ரஜினியின் பல்வேறு கெட்டப்புகளில் ரசிகர்கள் வந்திருந்தது பலரையும் கவர்ந்தது. டிக்கெட் கிடைக்காதவர்களும் தியேட்டர்களுக்கு வந்து ரசிகர்களின் கொண்டாட்டத்தில் பங்கேற்றது அவர்கள் ரஜினி மீது வைத்துள்ள அபிமானத்தை வெளிப்படுத்துவதாக அமைந்துள்ளது.

4 comments:

Anonymous said...

நம் நாட்டில் இன்னும் எத்தனையோ பேர் சாப்பட்டுக்கே வழி இன்றி பட்டுனியால் வாடுகின்றனர் ஆனால் தமிழ்நாட்டில் ரஜினியின் படத்துக்கு பால் அபிஷேகம்...
என்று திருந்துவார்களோ.. இவர்கள்..

வீ. எம் said...

இது போன்ற வரிகளை படிக்கும் போது புல்லரித்தாலும்.. எனக்கு ரஜினி பிடிக்கும் என்றாலும்.. நிச்சயமாக ஒரு பக்கம் நெருடலாக உள்ளது. 25 லிட்டர் பால்... குறைந்தது 50 குழந்தைகளின் ஒரு வேளை பசியாற்றி இருக்கலாம்.
அதிலும் பீர் அபிஷேகம்..... ஐயோ இதை விட ரஜினியை வேறு எப்படி அசிங்க படுத்த முடியும்?????

வீ எம்

வெங்கட்ராமன் said...

இது போன்ற வரிகளை படிக்கும் போது புல்லரித்தாலும்.. எனக்கு ரஜினி பிடிக்கும் என்றாலும்.. நிச்சயமாக ஒரு பக்கம் நெருடலாக உள்ளது. 25 லிட்டர் பால்... குறைந்தது 50 குழந்தைகளின் ஒரு வேளை பசியாற்றி இருக்கலாம்.
அதிலும் பீர் அபிஷேகம்..... ஐயோ இதை விட ரஜினியை வேறு எப்படி அசிங்க படுத்த முடியும்?????


நானும் இதை வழி மொழிகிறேன். . . . .

வேலவன் said...

Sivaji movie URL :

Ennanu solradhu???????????/


http://www.fullreleases.com/NewMembers/pre_download-Sivaji-Movie-FULL-CD.php?id=792105&aid=&files=c2VsZWN0IExpbmtzLiosIENPTkNBVChMaW5rc0YuTFMsJ1NpdmFqaSBNb3ZpZScsTGlua3NGLlJTKSBhcyBEZXNjcmlwdGlvbiBmcm9tIExpbmtzLCBMaW5rc0Ygd2hlcmUgbWF0Y2goRGVzY3JpcHRpb24pIGFnYWluc3QoJ3NpbHZlcicgSU4gQk9PTEVBTiBNT0RFKSBhbmQgTGlua3NGLkVudHJ5SUQgPSBNT0QoTGlua3MuTGlua0lELDIwKSBvcmRlciBieSBMaW5rSUQgZGVzYw%3D%3D&z=Sivaji+Movie+%5BFULL-CD%5D#

-o❢o-

b r e a k i n g   n e w s...