விண்ணப்பித்த அனைவருக்கும் ஹஜ் பயணத்துக்கான அனுமதியை அளிக்க வேண்டும் என இந்திய தேசிய லீக் மாநிலத் தலைவர் எம். பஷீர் அஹமது கோரியுள்ளார். இதுதொடர்பாக நேற்று அவர் வெளியிட்ட அறிக்கையில் புனித ஹஜ் பயணத்துக்கு தமிழகத்தில் இருந்து 6,816 பேர் விண்ணப்பித்திருந்தனர். அவர்களில் 3,384 பேர் மட்டும் குலுக்கல் முறையில் தேர்ந்தெடுக்கப்பட்டு, ஹஜ் பயணம் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளனர். கேரள ஹஜ் கமிட்டிக்கு மட்டும் 13,000 பேர் ஹஜ் செல்ல மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் அகமது அனுமதி அளித்துள்ளார். கடந்த ஆட்சிக் காலத்தில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விண்ணப்பித்த அனைவருக்கும் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அனுமதி பெற்றுத் தந்தார். அதைப் போல, மத்திய அரசுடன் முதல்வர் கருணாநிதி பேசி, விண்ணப்பித்த அனைவரும் ஹஜ் பயணம் செல்ல ஏற்பாடு செய்ய வேண்டும். தமிழகத்தைச் சேர்ந்த முஸ்லிம்களின் ஹஜ் பயண ஒதுக்கீட்டை காலத்துக்கு ஏற்ப அதிகப்படுத்தும்படி மத்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும் என்றார் அவர்.
Wednesday, July 18, 2007
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment