.

Friday, July 6, 2007

தமிழில் பேசினால், கம்ப்யூட்டரில் பதிவாகும் சாஃப்ட்வேர் : எஸ்எஸ்என் கல்லூரி மாணவர்கள் முயற்சி

தமிழில் பேசினால், அதை கம்ப்யூட்டர் பதிவு செய்யும் சாஃப்ட்வேரை எஸ்.எஸ்.என். பொறியியல் கல்லூரி வடிவமைத்து வருகிறது. அக்கல்லூரியின் சார்பில் கம்ப்யூட்டரை அதி உயர் திறனுள்ளதாக்குவது குறித்த சர்வதேச கருத்தரங்கு வரும் 12, 13 ஆகிய தேதிகளில் கல்லூரி வளாகத்தில் நடைபெறுகிறது.

இது குறித்து எஸ்.எஸ்.என். கல்விக் குழுமத் தலைவர் கலா விஜயகுமார் நிருபர்களிடம் வியாழக்கிழமை கூறியதாவது:

தமிழ்ப் பேச்சைப் பதிவு செய்யும் ஆய்வுப் பணியில் கம்ப்யூட்டர் சயன்ஸ் பேராசிரியர் சி.அரவிந்தன் தலைமையில் 8 மாணவர்கள் கொண்ட குழு ஈடுபட்டுள்ளது. இதற்கு அகில இந்திய தொழில்நுட்பக் கல்வி கவுன்சில் (ஏ.ஐ.சி.டி.இ.) ரூ.3 லட்சம் மானியம் அளித்துள்ளது.

இதற்கான பணி 6 மாதத்தில் நிறைவடையும் என்று தெரிகிறது. முதல் கட்டப் பணி 2008-ல் பூர்த்தியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரே சொல்லை வெவ்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்கள் எப்படியெல்லாம் உச்சரிக்கிறார்கள் என்பது கம்ப்யூட்டரில் பதிவு செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவின், கார்னகி மெலன் பல்கலைக்கழக பேராசிரியர் ராஜ் ரெட்டி தலைமை விருந்தினராகப் பங்கேற்கிறார். பெங்களூர் இந்திய அறிவியல் நிறுவனத்தின் இணை இயக்குநர் என்.பாலகிருஷ்ணன் தொடங்கிவைக்கிறார். அமெரிக்க விஞ்ஞானி சாமி முத்துசாமி உள்ளிட்டோர் பங்கேற்கிறார்கள்.

இக்கருத்தரங்குக்கு எச்.சி.எல். நிறுவனமும் இந்திய எலெக்ட்ரானிக்ஸ், எலெக்ட்ரிகல் பொறியியல் அமைப்பும் (ஐ.இ.இ.இ.) ஆதரவு தருகின்றன என்றார் கலா விஜயகுமார்.

கல்விக் குழும இயக்குநர் சஷிகாந்த் ஆல்பல் கூறியதாவது:

கம்ப்யூட்டர் சாதனங்களை ஒயர்லெஸ் முறையில் பயன்படுத்துவது குறித்தும் இக்கருத்தரங்கில் ஆராயப்படும். இதில் பங்கேற்க 330 பேர் ஆய்வுரைகளை அனுப்பினர். அதில், 36 ஆய்வுரைகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. 125 பேர் இக்கருத்தரங்கில் பங்கேற்கிறார்கள்.

மாணவர்கள் தங்களது ஆய்வுரைகளை அளிக்க ரூ.1,000 கட்டணம். மற்றவர்களுக்கு ரூ.2,000.

Dinamani

4 comments:

ILA (a) இளா said...

SSN மாணவர்களின் படைப்புகள் நிறைய Youtube'ல் பார்த்து இருக்கேங்க. அப்போவெல்லாம் யோசிப்பேன் யார் இவுங்கன்னு. இன்னொன்னா?

வெற்றி said...

இந்தச் செய்தியைப் படிக்கும் போதே மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது.
நல்ல முயற்சி.

CVR said...

இவிங்க மென்பொருளில் 'ழ' எழுத வைக்க என்ன செய்வாங்க????
மக்கள் 'ழ' சொன்னாதான் பதிவாகும்னா தமிழ்நாட்டுல பாதி பேர் உபயோகப்படுத்த முடியாதே!! :-)

Boston Bala said...

---மென்பொருளில் 'ழ' எழுத வைக்க---

I presume we can do i by context. Most of the voice Recognition software work hand in hand with spell checkers & dictionary with some spoken-grammar tool.

Some of them even have style corrections like personal letter writing presentation, official communication.

"I've" might become "I have" depending on the type of 'template'

-o❢o-

b r e a k i n g   n e w s...