.

Monday, August 13, 2007

பெங்களூரு: கூட்டு தற்கொலை, மூன்று பள்ளி மாணவிகள் பலி

சனியன்று பத்தாம் வகுப்பு மானவிகள் திவ்யா,அம்மு,ஜயந்தி, ஹம்சவேணி என்ற நால்வரும் கூட்டுத் தற்கொலை செய்துகொள்ள முடிவெடுத்து 10-11 மருந்துவில்லைகளையும் மூட்டைப்பூச்சி மருந்தையும் உட்கொண்டுள்ளனர். "எங்கள் மரணத்திற்கு யாரும் காரணமில்லை, நாங்கள் யாரையும் காதலிக்கவில்லை, யாரும் எங்களை ஏமாற்றவில்லை. நாங்கள் கூடி இறக்க விரும்புகிறோம். எங்கள் முழு சம்மதத்துடன் நாங்கள் இறக்கிறோம்" என தற்கொலை குறிப்பு எழுதிவைத்துள்ளனர்.அவர்கள் விக்டோரியா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டபோது மூச்சு திணறிக்கொண்டிருந்ததாக அவசர சிகிட்சைப் பிரிவு மருத்துவர் இரவீந்திரா கூறினார். அவர்களில் தற்போது ஹம்சவேணி மட்டுமே உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கிறார். மற்ற மூவரையும் காப்பாற்றமுடியவில்லை.
அவர்களின் பெற்றோருக்கும் பள்ளிநண்பர்களுக்கும் இது பேரதிர்ச்சியையும் வியப்பையும் கொடுத்திருக்கிறது.அவர்களின் இந்த விபரீதப் போக்கிற்கு காரணம் காணமுடியாவிடினும் அவர்களது வறுமை பின்னணி யைக் கொண்டு தங்கள் பெற்றோரால் தங்களை மேற்படிப்பு படிக்க வைக்கமுடியாது என்ற அவர்களின் எண்ணமே இதற்கு உந்துவிசையாக அமைந்திருக்கலாம் என பலரும் கருதுகின்றனர்.

IBNLive.com > Mass suicide in Bangalore, 3 teenage girls dead : Bangalore, student suicide, Bapuji Memorial School

2 comments:

மஞ்சூர் ராசா said...

மிகவும் கொடுமை...

இளம் நெஞ்சங்களில் இப்படிப்பட்ட எண்ணம் வந்திருப்பதே வேதனையளிக்கிறது.

யோகன் பாரிஸ்(Johan-Paris) said...

இந்தக் கொடுமை யப்பானில் மிக அதிகம் என ஒரு தொலைக்காட்சியில் விபரித்தார்கள்.
அத்துடன் செக்ற் போன்ற சில சமய அமைப்புக்களும் தூண்டுவதெனவும் அறிந்தேன்;
ஆனால் இச்சின்னஞ்சிறுதுகள் மனதில் இது வந்தது மிக வேதனையே!! வாழும் ஆசையை இவர்களுக்கு ஊட்டத் தவறியது யார்.
அதுவும் கொத்தாகச் சாக முடிவெடுத்துள்ளது; துயர்....

-o❢o-

b r e a k i n g   n e w s...