‘பத்து மாதம் கருவில் சுமந்த தாயை காலம் முழுவதும் சுமக்கிறோம். ஆனால், 10 வருடம் சுமக்கும் பள்ளியை மறந்து போகிறோம்’ என்ற முன்னுரையோடு தொடங்கும் படம். கிராமத்து பள்ளிக்கூடங்களின் நிலை, அதற்குள் உறங்கி கிடக்கும் உணர்வுகள், அதை வாழவைக்க நல்ல யோசனைப் பற்றி பேசுகிறது.
பல்லவமங்கலம் பச்சைமுத்து உயர்நிலை பள்ளியில் படிக்கும் நரேன் கலெக்டராகிறார், சீமான் சினிமா இயக்குனராகிறார், தங்கர் பச்சான் படிப்பு ஏறாமல் அதே ஊரில் கூலிக்காரராகிறார். சினேகா அதே பள்ளியில் ஆசிரியையாகிறார். போதிய பராமரிப்பின்மையாலும் சொத்துக்கு ஆசைப்படும் நிர்வாகியாலும் பள்ளி மூடப்படும் நிலை வருகிறது. இதனால் முன்னாள் மாணவர்களைத் திரட்டி அவர்களது நன்கொடை மூலம் பள்ளியை மூடாமல் தடுப்பது என்று முடிவு செய்யப்படுகிறது. முன்னாள் மாணவர்கள் பட்டியலிடப்படுகிறார்கள். கலெக்டர் நரேனை அழைத்து வரும் பொறுப்பை தங்கர் பச்சான் ஏற்றுக்கொண்டு கிளம்புகிறார். சென்ற இடத்தில் இயக்குனர் சீமானையும் சந்திக்கிறார். நரேன், சீமான் இருவருக்குமே கிராமத்தில் அழுத்தமான பிளாஷ்பேக் இருக்கிறது. அந்த உணர்வுகளையும், அதனால் ஏற்படும் சிக்கல்களையும் மீறி அவர்கள் பள்ளியை காப்பாற்றுகிறார்களா? என்பது கதை.
இனி சொந்த ஊருக்குச் செல்லும் ஒவ்வொருவரும் கும்பிடும் இடம் கோவிலாக மட்டும் இருக்காது, பள்ளிக்கூடமும் அதில் இணைந்திருக்கும். அதைச் செய்திருக்கிறது பச்சானின் இந்தப் பள்ளிக்கூடம்.
முழுவதும் படிக்க "தமிழ் முரசு" செல்லவும்.
Monday, August 13, 2007
"பள்ளிக்கூடம்" வி ம ர் ச ன ம்
Posted by சிவபாலன் at 9:25 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
நல்ல கதைக்களம்... கண்டிப்பா நல்லா எடுத்திருப்பாருனு நம்புவோம்...
அடடா! பாக்கோனுமே!!
எல்லோரும் நல்லா இருக்கு என்று சொல்வதைப் பார்த்தால் படம் பார்க்க ஆவலாக இருக்கு.
பார்ப்போம்
Post a Comment