.

Thursday, August 9, 2007

இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம்!

முதல்வர் கருணாநிதி சூளுரை!!
இந்தியை தமிழகத்தில் அனுமதிக்க மாட்டோம் என்று சென்னையில் நடைபெற்ற பெரியார் பட 100வது நாள் விழாவில் முதல்வர் கருணாநிதி சூளுரைத்தார்.

பெரியார் திரைப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழா சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்றது. விழாவிற்கு திராவிடக்கழக தலைவர் வீரமணி தலைமை தாங்கினார். தமிழக முதல்வர் கருணாநிதி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு பேசினார். பகுத்தறிவின் தந்தையான பெரியார் தன் வாழ்நாளில் அணிந்திருந்த மோதிரம் பெரியார் திரைப்படத்தில் சிறப்பாக நடித்த நடிகர் சத்யராஜிக்கு வழங்கப்பட்டது. நடிகர் சிவகுமார், நடிகைகள் மனோரமா, குஷ்பு ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். பெரியார் திரைப்படத்தில் நடித்த நடிகர்களுக்கு நினைவு பரிசுகள் வழங்கி கெளரவிக்கப்பட்டனர். திரையுலக நட்சத்திரங்கள், தமிழகஅமைச்சர்கள் உட்பட ஏராளமானோர் விழாவில் கலந்துகொண்டனர்.

4 comments:

Anonymous said...

avar family mattum hindi padikkanum ninaikkiraar poola?

Senthil Alagu Perumal said...

நீங்க மட்டும் இந்தி கத்துக்கோங்கப்பா எங்களைப் படிக்க விடாதீர். நாங்கள் தமிழ் நாட்டைவிட்டு வெளியே போனாலே ஒரே பிரச்சனை. வெளி நாட்டில் கூட இந்தி மொழி தெரியாததால் விழி பிதுங்குதுய்யா. வளைக்குடா நாட்டில் பாக்கிஸ்தானியர், வங்கதேசத்தார், நேப்பாளியர், அனைவரும் இந்தி பேசுகின்றனர். இந்தியாவை சேர்ந்த நாங்களோ (தமிழர்களோ) இந்தி தெரியாமல் மிகவும் அவதிப்படுகிறோம்...

கீழே உள்ள எனது பதிவைப் பார்க்கவும்.

http://kadalthandiyaparavaigal.blogspot.com/2007/07/blog-post_8421.html

Anonymous said...

ada paavingalaa, iwtha 2007 layum adangkalayaa neenga?

வவ்வால் said...

என்ன கொடுமை சார் இது,

அனுபவமற்ற தயானிதி மாறனுக்கு(அப்போது செல்லம்) எடுத்ததும் கேபினெட் அமைச்சர் பதவி கொடுத்தது பற்றி கேள்வி கேட்டதற்கு அவருக்கு ஹிந்தி தெரியும் எனவே சிறப்பாக டெல்லியில் செயல்படுவார் என்று பதில் சொன்ன மஞ்சள் துண்டுகாரரா இதை சொன்னது!!!

-o❢o-

b r e a k i n g   n e w s...