பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் அகாலிதளம்-பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. உத்தராஞ்சல் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளது..
பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 76 சதவீத ஓட்டுகள் பதிவாயின.இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சிரோன்மணி அகாலி தளம் பாரதிய ஜனதா கூட்டணி 68 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும் இதர கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது . இதனையடுத்து 4 வ து முறையாக பஞ்சாப்பின் முதல்வராகிறார் சிரோன்மணி அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல். மேலும் , அமிர்தசரஸ் லோக்சபா இடைத் தேர்தலில் பா.ஜ., கட்சியின் நவ்ஜோத் சித்து வெற்றி பெற்றார்.
உத்தராஞ்சலில் 69 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 55 சதவீதம் முதல் 60 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இதில் 36 இடங்களில் பாரதிய ஜனதாவும் 20 இடங்களில் காங்கிரசும், பிறகட்சிகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு என்.டி.திவாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்கிறது .இதனையடுத்து அம்மாநிலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி. கந்தூரி முதல்வராக தேர்வுசெய்யப்படலாம் என தெரிகிறது.
மேலும்...
Tuesday, February 27, 2007
பஞ்சாப், உத்தராஞ்சல் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது
Posted by
✪சிந்தாநதி
at
3:38 PM
0
comments
தமிழர்களுக்கு சம உரிமை இலங்கைக்கு ஜெ. கோரிக்கை
சிங்கள மொழி பேசுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தலைமுறை தலைமுறையாக இருக்கும் தமிழர்களுக்கும் உண்டு என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.
இலங்கையில் உள்ள தமிழர் பிரச்னை 40 ஆண்டு காலமாக லால்பகதூர் சாஸ்திரி - சிரிமாவோ பண்டாரநாயகே ஒப்பந்தத்துக்கு முன்பே இருந்து வருகிறது.
இதற்கிடையில், இலங்கையில் இருந்து தமிழர் பகுதிகளை விடுவித்து தனி ஈழம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிஎல்ஓடி, டிஈஎல்ஓ, ஈபிஆர்எல்எப், ஈஆர்ஓஎஸ், ஈஎன்எல்எப் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய போராட்டக் குழுக்கள் உருவாயின. ஆனால், ஒற்றுமையில்லாததால் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் போராடிக் கொண்டிருக்கிற சூழ்நிலை உருவானது.
இலங்கை தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில் இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு அந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்ற ஒரு சிலரின் கருத்தை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை.
- தினகரன்
Posted by
சிவபாலன்
at
7:29 AM
3
comments
ரயில்வே பட்ஜெட் ஏமாற்றம் அளிக்கிறது : ஜெ.
ரயில்வே பட்ஜெட் எல்லா தரப்பிலும் ஏமாற்றம் அளிக்கிறது என முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
* ஏழைகளுக்கென எந்த சிறப்புத் திட்டமும் இல்லை
* தமிழகத்தின் நீண்ட நாள் கோரிக்கையான மின்மயமாக்கல், இரட்டை ரயில் பாதை போன்ற கோரிக்கைகள் நிலுவையில்தான் உள்ளது
* இரண்டாம் வகுப்பு மற்றும, பொது வகுப்பு கட்டணத்தை குறிப்பிட்ட அளவு குறைத்திருக்க வேண்டும்.
* மொத்தத்தில் ஏழைகளுக்கு பாதகமான பட்ஜெட்
YAHOO INDIA - TAMIL
Posted by
சிவபாலன்
at
5:06 AM
0
comments
குட்ரோச்சி குழப்பம்
குட்ரோச்சி கைதாகி பின் பெயிலில் விடுதலை செய்யப்பட்டிருப்பது வரையிலான திருப்பங்கள், செய்திகள் மற்றும் அலசல்கள்.
Google News
Posted by
சிறில் அலெக்ஸ்
at
3:59 AM
0
comments
'க்ரீமி லேயரை தெரிந்தெடுப்பது கடினம்': தமிழக அரசு
உச்ச நீதிமன்றத்தில் தொடரப்பட்டுள்ள பொதுநல வழக்கொன்றிற்கு பதிலளிக்கையில் தமிழக அரசு சார்பில் க்ரீமி லேயரை தெரிந்தெடுப்பது கடினம் என்றும் இதற்கு சரியான ஃபார்முலா எதுவும் இல்லை எனவும், இதனால் க்ரீமி லேயருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதை தவிர்க்க இயலாது எனவும் வாதாடப் பட்டது.
TN govt. opposes exclusion of creamy layer for quota: The Hindu
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:34 AM
0
comments
ஷில்பாவை திட்டியவர் இந்தியா வருகை
'பிக் ப்ரதர்' நிகழ்சியில் ஷில்பாவை இழிவாய் பேசிய ஜேட் குடி(Jade Goody) 4 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளார்.
Hindustan Times.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:27 AM
0
comments
'பாக்கிஸ்தான் அல் கொய்தாவை ஒடுக்க உதவவேண்டும்': டிக் சேனி
அமெரிக்க துணை அதிபர் டிக் சேனி பாக்கிஸ்தான் அதிபரை சந்தித்து பாக்கிஸ்தான் எல்லைப்பகுதியில் அல் கொய்தா மீண்டும் வளர்ந்துவருவதாக வரும் செய்திகளைக் குறித்து வருத்தம் தெரிவித்தார்.
'பாக்கிஸ்தான் அல் கொய்தாவை அடக்கவேண்டும்' என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Google News 600+ articles
சற்றுமுன்னின் 100வது பதிவு.
Posted by
சிறில் அலெக்ஸ்
at
2:13 AM
0
comments
சங்கரராமன் கொலை வழக்கு - மார்ச் 20க்கு ஒத்திவைப்பு
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள்கோயில் மேலாளர் சங்கரராமன் கொலை வழக்கு விசாரணை அடுத்த மாதம் 20ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
குற்றம்சாட்டப்பட்ட 24 பேரில் 13 பேர் மட்டுமே ஆஜரானார்கள்.
ஜெயேந்திரர் மற்றும் விஜயேந்திரர் இன்று ஆஜராகவில்லை.
MSN INDIA - TAMIL்
Posted by
சிவபாலன்
at
12:52 AM
0
comments
Monday, February 26, 2007
திமுகவுடன் கருத்து வேறுபாடு உள்ளது - வரதராஜன்
திமுகவுடன் பல்வேறு பிரச்சனைகளில் கருத்து வேறுபாடு உள்ளதாக ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் என். வரதராஜன் கூறியுள்ளார்.
MSN INDIA - TAMIL்
Posted by
சிவபாலன்
at
11:49 PM
0
comments
கொட்ரொக்கி விடுவிக்கப்பட்டார்..
போஃபர்ஸ் பீரங்கி பேர ஊழலில் தொடர்புடைய கொட்ரொக்கி கடந்த 6ம் தேதி அர்ஜென்டின அரசால் கைதுசெய்யப்பட்டார். இவரை இந்தியாவுக்கு கொண்டுவர இந்திய அரசு அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகிறது.இந்நிலையில் இவர் இன்று பெயிலில் விடுவிக்கப்பட்டுள்ளார். மேலதிக விவரங்களுக்கு
Posted by
மணிகண்டன்
at
11:04 PM
1 comments
ஒரிசா உள்ளாட்சி தேர்தல்
புவனேஸ்வர், பிப். 24- ஒரிசாவில் முதல்- மந்திரி நவீன் பட்நாயக் தலைமையில் பிஜூ ஜனதா தளம்- பாரதீய ஜனதா கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. கடந்த 2000 ஆம் ஆண்டு முதல் இந்த கூட்டணி ஆட்சி நடக்கிறது.
மொத்தம் உள்ள 30 மாவட்ட பஞ்சயத்தில் பிஜூ ஜனதா தளம்-பாரதீய ஜனதா கூட்டணி 23 இடங்களை கைப்பற்றியுள்ளது. பிஜூ ஜனதா தளம் 19 மாவட்ட பஞ்சாயத்துகளை யும் தக்க வைத்துக் கொண்டுள்ளது. பாரதீய ஜனதா 4 இடங் களில் வெற்றி பெற்றது.
Maalaimalar
Posted by
Boston Bala
at
10:50 PM
0
comments
இ-பைசைக்கிள் - பெங்களூரில் அறிமுகம்
பெங்களூரில் பேட்டரியில் இயங்கும் சுற்றுச்சூழலை பாதிக்காத வகையில் "இ-பைசைக்கிள்" என்ற இருசக்கர அறிமுகமுகப்படுத்தியுள்ளது
வாகனத்தை சேவியோ என்ற நிறுவனம் இமாசல பிரதேசத்தில் தயாராகின்றது. சீனாவில் இருந்து பேட்டரிஇறக்குமதியாகிறது.
அரை யூனிட் மின்சாரம் இருந்தால் இதன் பேட்டரியை சார்ஜ் செய்ய முடியும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 55 கி.மீ. ஓட்டலாம். சார்ஜ் தீர்ந்தால் பெடல் செய்தும் ஓட்டலாம். பேட்டரியை தனியே பிரித்தெடுத்து சார்ஜ் செய்த பிறகு சைக்கிளில் பொருத்திக் கொள்ளலாம்.
இதில் 120 கிலோ பளு எடுத்து செல்லலாம். டபுள்ஸ் செல்லலாம். பிரேக் பிடித்ததும் பேட்டரி தானாக ஆஃப் ஆகிவிடும். சிக்னலிலோ, மற்ற இடங்களிலோ நிற்கும் நேரத்தில் மின்சாரம் செலவாகாது. மணிக்கு 30 கி.மீ. வேகத்தில் செல்ல முடியும்.
ரூ.10 ஆயிரம் மதிப்புள்ள இ-பைசைக்கிளை பெங்களூரில் சுசில் வித்யுத் மோட்டார்ஸ் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது மாலை முரசில் வந்த செய்தி. வேறு சுட்டி கிடைத்தால் Update செய்யப்படும்.
Posted by
சிவபாலன்
at
9:27 PM
0
comments
தி.மு.க அரசை டிஸ்மிஸ் செய்ய சரியான தருணம்: ஜெ
'திமுக அரசை டிஸ்மிஸ் செய்ய சரியானதருணம் இது' என ஜெயலலிதா அறிக்கையிட்டுள்ளார்.
தாட்ஸ்தமிழ்
என்னை சிறைக்கு அனுப்ப துடிக்கிறார்கள் - விஜயகாந்த்
தாட்ஸ்தமிழ்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:25 PM
0
comments
சென்னையில் புதிய கார் தொழிற்சாலை
மகிந்த்ரா, ரெனால்ட் மற்றும் நிஸான் இணைந்து சென்னையில் ரூ. 4,000 கோடி முதலீட்டில் புதிய கார் தொழிற்சாலை ஒன்றை துவங்க உள்ளனர்.
தாட்ஸ்தமிழ்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:23 PM
2
comments
சன் டிவி மீது வழக்கு
சன் டிவி நிறுவனம் சிக்னல் பவழங்க மறுப்பதை எதிர்த்து டெல்லி உயர்நீதி மன்றத்தில் டாடா ஸ்கை டிடிஎச் நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
தாட்ஸ் தமிழ்
Posted by
சிறில் அலெக்ஸ்
at
8:20 PM
0
comments
b r e a k i n g n e w s...


