.

Tuesday, February 27, 2007

தமிழர்களுக்கு சம உரிமை இலங்கைக்கு ஜெ. கோரிக்கை

சிங்கள மொழி பேசுகிறவர்களுக்கு என்ன உரிமை இருக்கிறதோ அதே உரிமை தலைமுறை தலைமுறையாக இருக்கும் தமிழர்களுக்கும் உண்டு என்று ஜெயலலிதா கூறியுள்ளார்.

இலங்கையில் உள்ள தமிழர் பிரச்னை 40 ஆண்டு காலமாக லால்பகதூர் சாஸ்திரி - சிரிமாவோ பண்டாரநாயகே ஒப்பந்தத்துக்கு முன்பே இருந்து வருகிறது.

இதற்கிடையில், இலங்கையில் இருந்து தமிழர் பகுதிகளை விடுவித்து தனி ஈழம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் பிஎல்ஓடி, டிஈஎல்ஓ, ஈபிஆர்எல்எப், ஈஆர்ஓஎஸ், ஈஎன்எல்எப் மற்றும் விடுதலைப் புலிகள் ஆகிய போராட்டக் குழுக்கள் உருவாயின. ஆனால், ஒற்றுமையில்லாததால் அவர்களுக்குள் ஒருவரை ஒருவர் போராடிக் கொண்டிருக்கிற சூழ்நிலை உருவானது.

இலங்கை தமிழர் பிரச்னையை பொறுத்தவரையில் இந்திய அரசு முனைப்புடன் செயல்பட்டு அந்த பிரச்னையை தீர்க்க வேண்டும். புலிகள் இயக்கத்துக்கு ஆதரவு தரவேண்டும் என்ற ஒரு சிலரின் கருத்தை அதிமுக ஏற்றுக்கொள்ளவில்லை.

- தினகரன்

3 comments:

Anonymous said...

தமிழர்களுக்கு நிறைய குரல்கள் வருகின்றன

ஆனால் தீர்வு தான் எப்பொழுது

மு. மயூரன் said...

ஈழத்தமிழர்களுக்கான தமிழகத்தின் ஆதரவளிப்பு தொடர்பான இந்த வலைப்பதிவை பார்வையிடவும்.

Anonymous said...

இந்த அறிக்கைகள் எல்லாம் வெட்டிப் பேச்சு. மக்களைச் சரியான முறையில் வழி நடத்தவேண்டும் தமிழகத் தலைவர்கள். ஈழ மக்க்ளுக்குத் தீர்வு என்ன என்பது உள்ளங்கை நெல்லிக்கனி. இந்திய ஒப்பந்தத்தில் இணைந்த வடக்கு, கிழக்கு மாகாணங்களே இப்பொழுது பிரிக்கப் பட்டிருக்கும் போது, எந்த ஒரு ஒப்பந்தமோ, உடன்படிக்கையோ, சிங்கள அரசுகளுன் செய்வது வீண். இது புரிந்தால், என்னத்திற்கு ஆதரவு வேண்டும் என்பதைத் தமிழகத் தலவர்கள் மக்கள் மூலம் மத்திய அரசிற்குப் புரிய வைக்க வேண்டும். சும்மா பேசிப் பயனில்லை. வாழ்க அறிவுமதி.

-o❢o-

b r e a k i n g   n e w s...