.

Tuesday, February 27, 2007

பியர் விலை ஏறப் போகிறது

பெட்ரோலுக்கு பதிலாக மாற்று எரிபொருளைப் பயன்படுத்த உலகம் ஆயத்தமாவதில், ஓரிரு குறைகளும் உண்டு. முன்பு பார்லியைப் பயிரிட்டவர்கள் இப்பொழுது சோளம், சோயா விதைப்பதற்கு மாறிவிட்டார்கள்.

1866-க்குப் பிறகு தற்போதுதான் இவ்வளவு குறைவான அறுவடையின் காரணமாக, கடந்த வருடத்தில் மட்டும் வாற் கோதுமையின் விலை 85% உயர்ந்திருக்கிறது. பியரின் விலையை நிர்ணயிப்பதில் பார்லிக்கு எட்டு சதவிகிதம் இடம் இருக்கிறது.

மேலும்: FT.com / MARKETS / Commodities - Blow for beer as biofuels clean out barley

5 comments:

மிதக்கும்வெளி said...

'அத்தியாவசிய'ப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து யாராவது போராட்டம் நடத்துவார்களா?

Boston Bala said...

போதையேறும் வரை பியர் குடிக்கும் போராட்டம்... அலை கடலென வாருங்கள் :))

Jayaprakash Sampath said...

இந்த அராஜகத்துக்கு ஒரு அளவே இல்லையா? சிகரட்டு விலை ஏறிவிட்டது. ஆனால் வெளியே புலம்பக்க்கூட முடியவில்லை,, 'அப்ப புடிக்கறத நிறுத்திடு'ன்னு அட்வைஸ் வேற... இப்ப பீர் வெலையும் ஏத்திட்டாங்களா? நல்லது..

We The People said...

//'அத்தியாவசிய'ப் பொருட்களின் விலை உயர்வைக் கண்டித்து யாராவது போராட்டம் நடத்துவார்களா?//

நம்ம மத்திய அரசுக்கு ஆதரவு தரும் கம்யூனிஸ்டுகள் டெய்லி காமெடி பண்ணறது தெரியவில்லையா?? நேற்று கூட பலர் கைது செய்ய்பட்டனர் :)))

இவங்க மக்களை கொல்லாம விடமாட்டங்க தலைவா!!

சிறில் அலெக்ஸ் said...

இந்தியக் 'குடி'மக்களுக்கு இந்த விலைவாசி ஏற்றம் பெரும் கவலைதான்.

-o❢o-

b r e a k i n g   n e w s...