பத்திகோலா பகுதியை பார்வையிட வந்த பன்னாட்டு தூதர்கள் குழுவினரின் ஹெலிகாப்டர் மீது புலிகள் நடத்திய தாக்குதலில் அமெரிக்க மற்றும் இத்தாலிய தூதர்கள் காயமடைந்தனர். அவர்களுடன் ஏழு இலங்கை இராணுவத்தினரும் காயமடைந்தனர். கூட பயணித்த கனாடிய,பிரென்ச் மற்றும் ஆங்கில தூதர்கள் காயமெதுவும் இன்றி தப்பினர்.
புலிகளின் சார்பில் ராசையா இளந்திரையன் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடுத்த அறிக்கையில் வெளிநாட்டு தூதர்களின் பயணவிவரம் தங்களுக்கு இலங்கை அரசு அளிக்காததே தவறுதலுக்குக் காரணம் என்றார்.
மேல் விவரங்களுக்கு..
Tuesday, February 27, 2007
புலிகள் தாக்குதலில் அமெரிக்க, இத்தாலிய தூதர்கள் காயம்
Labels:
ஈழம் - இலங்கை
Posted by மணியன் at 7:49 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
12 comments:
//பத்திக்கோலா//
கொல்கிறீர்களே தமிழ் மக்களே.
மட்டக்களப்பு என்ற ஊர் ஐயா அது.
கொஞ்சம் அக்கம் பக்கம் விசாரித்து எழுதுங்களேன்.
அனானி,
செய்தி தவறில்லை அவர்கள் 'பார்வையிட' வந்தது பத்திக்கோலாதான். உங்கள் பங்களிப்புக்கு நன்றி.
The delegation representing donor nations had traveled to the eastern city of Batticaloa to review development in the area, a hotbed of separatist violence that was hit hard by the 2004 Asian tsunami.
சார்! தமிழ் நகரப் பெயர்களை ஈழ இணையத் தளங்களில் பார்வையிடவும்.
உங்கள் ஆர்வம் தொடர வாழ்த்துக்கள்.
சிறில் தமிழில் அது மட்டகளப்பு. அனானி சொல்வது சரியே. தமிழில் யாரும் பத்திகோலா என எழுதுவதில்லை.
//தமிழில் யாரும் பத்திகோலா என எழுதுவதில்லை.//
ஓ. இது எனக்குத் தெரியாது.
:(
இதுபோன்ற தகவல்களை தெரிந்தவர்கள் பின்னூட்டத்தில் இணை-செய்திபோலவே சேர்க்கலாமே?
அனானி அதைத்தான் செய்திருக்கிறார். ஆனா பொதுவா பதிவுகளுக்கு பின்னுட்டங்கள் எழுதி எழுதி நாம நக்கல் பின்னூட்டம் போட்டே பழகிட்டோம்னு நினைக்கிறேன்.
:))
நன்றி அனானி, திரு.
இன்னும் சில உதாரணங்கள் திரிகோணமலை, யாழ்ப்பாணம், நீர்க்கொழும்பு முதலிய இடங்கள் ஆங்கிலத்தில் Trincomale, Jaffna, Negambo என இருக்கும்.
இப்போ தானே நிருபர் ஆகி இருக்கீங்க. போக போக நிறைய இதுமாதிரி தெரியவரும்.
ஐரோப்பாவிற்கு நிருபர்கள் அவசியமா? :)
என் சந்தேகத்தையும் கேட்டுக்கறேன்...
Jaffna - யாழ்ப்பாணம்?
ஆமாம் பாலா! தமிழில் யாழ்ப்பாணம்
திரு,
அவசியம் வாங்க. தனிமடல் அனுப்புறேன்.
திரு,
satrumun @ gmail.com ற்கு ஒரு மடல் அனுப்புங்கள்.
நன்றி திரு
செய்தி தவறான கருத்தைத் தருகிறது.
உலங்குவானூர்தி மீது தாக்குதல் நடத்தப்படவில்லை.
இராணுவ முகாம்மீதுதான் எறிகணைத்தாக்குதல் நடத்தப்பட்டது. அந்த இராணுவமுகாமில் தூதுவர்கள் வந்திருந்தபோது தாக்குதல் நடத்தபட்டதால் அவர்கள் மாட்டிக்கொண்டார்கள்.
அந்த முகாமுக்கு தூதுவர்கள் வந்தது உலங்குவானூர்தி மூலம்.
Post a Comment