.

Tuesday, February 27, 2007

பஞ்சாப், உத்தராஞ்சல் காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது

பஞ்சாப் மாநில சட்டசபைத் தேர்தலில் அகாலிதளம்-பாரதீய ஜனதா கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. காங்கிரஸ் ஆட்சியை இழக்கிறது. உத்தராஞ்சல் மாநில சட்டமன்றத் தேர்தலிலும் காங்கிரஸ் கட்சியைத் தோற்கடித்து பாரதீய ஜனதா வெற்றி பெற்றுள்ளது..

பஞ்சாபில் மொத்தம் உள்ள 117 தொகுதிகளில் 116 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 76 சதவீத ஓட்டுகள் பதிவாயின.இன்று ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் சிரோன்மணி அகாலி தளம் பாரதிய ஜனதா கூட்டணி 68 இடங்களிலும், காங்கிரஸ் 43 இடங்களிலும் இதர கட்சிகள் 5 இடங்களிலும் வெற்றி பெற்றன. அமரீந்தர் சிங் தலைமையிலான காங்கிரஸ் அரசு தோல்வி அடைந்தது . இதனையடுத்து 4 வ து முறையாக பஞ்சாப்பின் முதல்வராகிறார் சிரோன்மணி அகாலி தள தலைவர் பிரகாஷ் சிங் பாதல். மேலும் , அமிர்தசரஸ் லோக்சபா இடைத் தேர்தலில் பா.ஜ., கட்சியின் நவ்ஜோத் சித்து வெற்றி பெற்றார்.

உத்தராஞ்சலில் 69 தொகுதிகளுக்கு தேர்தல் நடந்தது. இதில், 55 சதவீதம் முதல் 60 சதவீத ஓட்டுகள் பதிவாயின. இதில் 36 இடங்களில் பாரதிய ஜனதாவும் 20 இடங்களில் காங்கிரசும், பிறகட்சிகள் 13 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளன. இங்கு என்.டி.திவாரி தலைமையிலான காங்கிரஸ் அரசு கவிழ்கிறது .இதனையடுத்து அம்மாநிலத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் பி.சி. கந்தூரி முதல்வராக தேர்வுசெய்யப்படலாம் என தெரிகிறது.

மேலும்...

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...