.

Friday, February 23, 2007

பெரியது கேட்கின்........

Largest Colossal Squid

பிரமாண்டமான ஸ்க்விட்( தமிழில் பேர் தெரிஞ்சவுங்க சொல்லுங்க) பிடிபட்டுருக்கு,
இங்கே நியூஸியின் கடலில் தெந்துருவத்தின் அருகே.

இது 450 கிலோ எடை இருக்காம். உலகில் இதுவரை பிடிபட்டவைகளில்
இதுவே பெரியது என்று நிபுணர்கள் சொல்கிறார்கள்.

இன்னிக்கு எங்க ஊர் டிவிக்கு செய்தி கிடைச்சிருச்சு:-)))))

மேல் விவரங்கள் இங்கே.

இதற்கு முன்பு பிடிபட்டவைகளைப்பற்றி மற்ற விவரங்கள் பார்க்கணுமா?

அது இங்கே.

9 comments:

சிறில் அலெக்ஸ் said...

Squid எங்க பக்கத்துக கணவ, கணவை, கணவாய் என்பதுபோல சொல்வாங்க.

இலவசக்கொத்தனார் said...

கொஞ்ச நாள் முன்னாடிதான் ஜப்பானில் உயிரோட பிடிச்சதா ஒரு விடியோ பார்த்தேன்.

G.Ragavan said...

டீச்சர், ஸ்க்விட்டுக்குத் தமிழ்ல காணவாய்னு பேரு. ஏன் அந்தப் பேருன்னு எனக்குத் தெரியாது. எனக்கு இது சாப்பிடப் பிடிக்காது. ரப்பர் மாதிரி இருக்கும். ஒரு துண்டு சீலாக் கருவாடு இருந்தாக் கூடப் போதும்.

இவ்வளவு பெருசா பிடிச்சிருக்காங்களே. ஊருக்கே கொழம்பு காச்சி ஊத்தலாம் போல. ம்ம்ம்.

G.Ragavan said...

சொல்ல மறந்துட்டேனே...தலைப்பூ சூப்பரு.

துளசி கோபால் said...

//கணவ//

நல்லவேளை கணவ(ர்)ன்னு இல்லை:-))))

மணியன் said...

கோவையில் கணுவாய் என்று ஓரிடம் இருக்கிறது :)

Anonymous said...

//ரப்பர் மாதிரி இருக்கும்//

நேரடியா சமைக்கும்போது அப்படித்தான் இருக்கும். ஆனா இப்ப நாங்க அப்படிச் செய்வதில்லை. முதல்ல உப்பு போட்டு தண்ணீரில் நன்றாக வேக வைக்கணும். அதுக்கப்புறமா எடுத்து பொரியல் செஞ்சு சாப்பிட்டா பஞ்சு மாதிரி இருக்கும்.

கணவை- மிகவும் பிடித்த sea-food

Boston Bala said...

Global warming-இனால் இந்த வித ராட்சத சைஸ்கள் உருவாவது அதிகரித்து வருகிறது.

---அதுக்கப்புறமா எடுத்து பொரியல் செஞ்சு சாப்பிட்டா பஞ்சு மாதிரி இருக்கும்---

Pasta primavera என்று மசாலா, பாலாடைக்கட்டி எல்லாம் போட்டு கலக்கிப் போடலாம். இங்கு பல உணவகங்களில் அருமையாக செய்து தருகிறார்கள்.

துளசி கோபால் said...

கொத்ஸ்,

வாங்க.

இதுவும் பிடிக்கறப்ப உயிரோடுதான் இருந்துச்சாம்:-)

பாதி சாப்பாட்டுலே இருந்துச்சுன்னு சொல்றாங்க. முழுசா முழுங்கவிடலை, பாவம்(-:


ராகவன்,

இது அரசாங்கத்துக்குச் சொந்தமுன்னு சொல்லிட்டாங்களாம். அதனாலெ குழம்புக்கு
அரைச்ச மசாலா வீணாப் போச்சு :-)

//தலைப்பூ சூப்பரு. //

எல்லாம் டீச்சர் சாமி தயவுதான். 'பூவோடு சேர்ந்த நார்'


வாங்க மணியன்.

அந்த ஊர்லே இந்த மீன்வகை நிறைய இருக்கா? ஆமா.......... அங்கே ஏது கடல்?


சிந்தாநதி,

ரெஸிபி நோட்டட். இது ஊருக்குத்தான், எனக்கல்ல.


வாங்க பாபா.

//Global warming-இனால் இந்த வித ராட்சத சைஸ்கள் உருவாவது அதிகரித்து வருகிறது. //

இதுக்கும் காரணம் இதுதானா? அப்ப நாமளும் ராட்சத சைஸ்கள் வளர வாய்ப்பிருக்குமோ(-:

-o❢o-

b r e a k i n g   n e w s...