.

Sunday, March 18, 2007

இந்தியா பங்ளாதேஷிடம் தோல்வி

இது எப்படி சாத்தியம்? ஆச்சர்யம் இன்னும் தீரவில்லை.

டாசை வென்றதும் பேட்டிங்க் தேர்ந்தெடுத்தார் ட்ராவிட். ஆனால் நம் பேட்ஸ்மேன்கள் எதையுமே சாதிக்க இயலவில்லை. கங்குலி சேவாக் தவிர்த்து பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் அவுட் ஆகினர்.

சேவாக் துவக்கிவைத்தார். அவர் அவுட் ஆகும்போது அடித்த ஷாட்போன்ற ஒரு தெளிவற்ற ஷாட்டை பங்ளாதேசின் பௌலர்கள்கூட ஆடமாட்டார்கல் போல. பங்ளாதேஷின் பௌலர்கள் பெரிதாய், வித்யாசமாய் எதுவுமே செய்யவில்லை என்றே தோன்றியது. ஸ்லோ பிட்ச்சில் வேகப் பதுவீச்சாளன் பந்துகளும் மெதுவாகவே வந்தன. தோனி ஸ்கோருக்கு எதுவும் சேர்க்காதது இன்னொரு குறை.

பங்ளாதேஷ் தன்னம்பிக்கையுடன் உள்ளே இறங்கி பேட் செய்தது. இந்திய பேட்ஸ்மேன்களைப் போலல்லாமல் துவக்கத்திலிருந்தே நம்பிக்கையுடன் விளையாட ஆரம்பித்தனர். சிறப்பான ஆட்டம்.

ஸ்லோ பிட்சில் ஸ்பின்னர்களை முழுதாகப் பயன்படுத்தாததன் மர்மம் ட்ராவிட்டுக்கு மட்டுமே வெளிச்சம்.

Indians looked totally lost. No confidence what so ever. What's the strategy Dravid?

மேட்ச் ஃபிக்சிங் பற்றிய பழைய முரட்டுக் கனவுகள் வந்துபோகின்றன. இந்த உலகக் கோப்பையில் எந்த நாட்டிலிருந்து என்ன எதிர்பார்ப்பது என்கிற குழப்பமே மிஞ்சுகிறது.

இந்தியாவுக்கு சூப்பர் 8ல் இடம் வாய்க்குமா? பாக்கிஸ்தான் நிலமை என்னவாகும்?

3 comments:

தமிழ் சசி | Tamil SASI said...

மேட்ச் ஃபிக்சிங் பற்றிய பழைய முரட்டுக் கனவுகள் வந்துபோகின்றன

***

இது சரி அல்ல. இந்தியா தோற்கும் பொழுதெல்லாம் மேட்ச் ஃபிக்சிங கொண்டு வரப்படுவது வழக்கமான ஒன்று

பங்களாதேஷ் அணியை குறைத்து மதிப்பிட்டு, இந்தியா டாஸ் வென்றவுடன் பேட்டிங் செய்ய தீர்மானித்தது திராவிட்டின் தவறு. காலையில் அடுகளம் பந்துவீச்சிற்கு சாதகமாக இருந்தது. எனவே பவுளிங் செய்திருக்க வேண்டும்.

தவிர பங்களாதேஷின் புதுமுகங்கள் இந்திய பந்துவீச்சினை எதிர்கொண்ட விதம், இந்திய பேட்ஸ்மேன்களிடம் காணப்படவில்லை - including Ganguly

சிவபாலன் said...

Ireland 113/7 (35.0/47 ov)

நாகு (Nagu) said...

கொடுமையான தோல்வி. 'காகிதத்தில் பலமான' பேட்டிங் லைன் அப் என்று எல்லோரும் எழுதுகிறார்கள். பழைய பேப்பர்கடைக்கு போகும் நேரம் வந்து விட்டது. இது ஒரு சரியான அடி. மிக இளம்வயது வங்காளதேச ஆட்டக்காரர்களின் பக்குவம் கூட நம் முதிர்ந்த ஆட்டக்காரர்களிடம் இல்லை. ஒருவேளை ரொம்ப 'முதிர்ந்து' போய்விட்டார்களோ?

சேவாக், சச்சின் முதற்கொண்டு சரியாக ஆடாதவர்களை வீட்டுக்கு அனுப்ப வேண்டும். இப்போழுதென்ன காரணம் காட்டி சேவாக்கை அணியில் வைத்திருப்பார்கள்? ஓ - இரண்டு விக்கெட் எடுத்திருக்கிறாரே!!!

-o❢o-

b r e a k i n g   n e w s...