.

Friday, March 16, 2007

சென்னையிலிருந்து அமெரிக்காவுக்கு நேரடி சரக்கு கப்பல் போக்குவரத்து

சென்னை துறை முகத்திலிருந்து அமெரிக் காவுக்கு நேரடியாக கண்டெய்னர் களை ஏற்றி செல்லும் கப்பல் போக்கு வரத்து இன்று தொடங்கியது. அமெரிக் காவிலிருந்து வந்த பிரம்மாண் டமான சரக்கு கப்பல் இன்று காலை சென்னை துறைமுகத்துக்கு வந்தடைந்தது

இவ்வளவு பெரிய கப்பல். சென்னை துறைமுகத்துக்கு வருவது இதுவே முதல்முறை. இந்த கப்பல் 294 மீட்டர் நீளமுள்ளது. இதில் 5100 கண்டெய்னர்களை ஏற்றி செல்லலாம். இந்த கப்பலின் எடை 55000 டன் இவ்வளவு பெரிய கப்பலை சென்னை துறைமுகத்தில் முதல் முறையாக கையாள்கிறோம். இன்று இரண்டாயிரம் கண் டெய்னர்கள் இந்த கப்பலி லிருந்து இறக்கப்பட்டன. 2000 கண்டெய்னர்கள் ஏற்றப்பட்டன. இதுவரை சென்னையிலிருந்து அமெரிக் காவுக்கு கண்டெய்னர்கள் கொழும்பு துறை முகத்துக்கு கொண்டு சென்று அங்கிருந்து பெரிய கப்பலில் ஏற்றி அனுப்பப்படும். இனி அந்த பிரச்சினை இல்லை அமெரிக்காவுக்கு நேரிடையாக கண்டெய்னர்களை ஏற்றி செல்ல முடியும்.

source; மாலைமலர்

4 comments:

சிவபாலன் said...

நல்ல செய்தி!!

SP.VR. SUBBIAH said...

நல்ல செய்தி மிஸ்டர் சிவபாலன்
Partial shipment of Parcels - அனுமதியுண்டா?

காட்டாறு said...

சேது சமுத்திர திட்டம் நிறைவேறினால், தூத்துக்குடி வரை செல்லுமா?

சிவபாலன் said...

சுப்பையா அய்யா, காட்டாறு

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...