.

Wednesday, March 21, 2007

மனசைவிட்டு மவுசைத் தட்டு !

சிங்கப்பூர்: இன்டர்நெட்டில் நடிகையின் படத்தைப் போட்டு, திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, அமெரிக்காவில் வசிக்கும் சாப்ட்வேர் என்ஜீனியரை ஏமாற்றி பண மோசடி செய்ததாக சிங்கப்பூரைச் சேர்ந்த இந்தியப் பெண் கைது செய்யப்பட்டார்.

சிங்கப்பூரில் வசித்து வருபவர் மல்லிகா ராமு (36). திருமணமான இவர், இன்டர்நெட்டில் நடிகை காயத்ரி ஜோஷி என்பவரின் புகைப்படத்தைப் போட்டு, சஞ்சனா பரேக் என்ற பெயரில் தனது புரொஃபைலை உலவ விட்டிருந்தார்.

அதைப் பார்த்து விட்டு அமெரிக்காவில் சாப்ட்வேர் என்ஜீனியராகப் பணியாற்றும் பரணிஇந்திரன் (32) என்ற வாலிபர் மல்லிகாவுடன் தொடர்பு ஏற்படுத்தினார். பரணியுடன் நெருக்கமான நட்பு ஏற்படுத்திக் கொண்ட மல்லிகா, அவரைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்தார்.

இருவரும் கடந்த 2004ம் ஆண்டு செப்டம்பர் முதல் சாட்டிங் மூலம் நெருக்கமான நட்பை வளர்த்து வந்தனர். இந்த நட்பைப் பயன்படுத்தி பரணியிடமிருந்து 68 ஆயிரம் சிங்கப்பூர் டாலர் பணத்தை கறந்துள்ளார் மல்லிகா.

2004 நவம்பரில் 19,175 அமெரிக்க டாலர்கள், கடந்த கடந்த 2005ம் ஆண்டு ஜனவரி மாதம் 29ம் தேதி தனது அம்மா இறந்து விட்டதாக கூறி 25 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் வாங்கியுள்ளார் மல்லிகா. ஆனால் அவரது அம்மா அதற்கு 3 ஆண்டுகளுக்கு முன்பே இறந்து போய் விட்டாராம்.

இதையடுத்து 2005ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களில் முறையே 15,400 அமெரிக்க டாலர்கள், 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பணத்தைப் பெற்றுள்ளார்.

இந்த நிலையில் மேலும் 10 ஆயிரம் அமெரிக்க டாலர் பணம் தருமாறு கடந்த 2005ம் ஆண்டு மே மாதம் கேட்டுள்ளார் மல்லிகா. அப்போது பரணிக்கு சந்தேகம் வந்து விட்டது. இதையடுத்து அவர் போலீஸில் புகார் கொடுத்தார். போலீஸார் விசாரணை நடத்தி மல்லிகாவைக் கைது செய்தனர்.

தனது மனைவியின் மோசடிச் செயலை அறிந்து அவரது கணவர் (அவருக்கு 41 வயதாகிறது) அதிர்ந்து போய் விட்டார். மல்லிகா மீதான வழக்கு சிங்கப்பூர் நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது.

மல்லிகாவுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதித்து நீதிபதி அமி டுங் தீர்ப்பளித்தார். கைது செய்யப்பட்டவுடன், பரணியிடமிந்து தான் கறந்த பணத்திலிருந்த 36 ஆயிரம் அமெரிக்க டாலர்களைத் திருப்பிக் கொடுத்து விட்டார் மல்லிகா.

செய்தி : நன்றி தட்ஸ் தமிழ்

1 comment:

சிவபாலன் said...

GK,

என்னங்க இப்படி கூட நடக்குதா?! என்னமோ போங்க.. ம்ம்ம்

-o❢o-

b r e a k i n g   n e w s...