.

Wednesday, March 21, 2007

ஏழை மாணவருக்கு தமிழக முதலமைச்சர் நிதி உதவி

நாகர்கோயில், அனந்தபத்மனாபபுரத்தைச் சேர்ந்த ஏழை மாணவர் திரு.ஆர்.சிவராமனுக்கு சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் பயில உதவித் தொகையாக மாண்புமிகு தமிழக முதலமைச்சர் கலைஞர் அவர்கள் ரூ.25,000/-க்கான காசோலையை, இன்று (20.03.2007) தலைமைச் செயலகத்தில், முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து வழங்கினார்கள்.

சென்னை அரசு கவின்கலைக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு செராமிக் கலை படித்து வருகிறார் சிவராமன். தாய் தந்தையர் கூலித் தொழில் செய்கிறார்கள். ஏழ்மையின் காரணமாக, மேற்படிப்பைத் தொடர முடியாத நிலை. படிப்பிற்கு நிதி உதவி செய்யுமாறு முதலமைச்சரிடம் மார்ச் 13 அன்று விண்ணப்பித்திருந்தார்.

செய்தி மக்கள் தொடர்புத்துறை.

3 comments:

அ. இரவிசங்கர் | A. Ravishankar said...

இப்படி அரசு அறிவிப்பை எல்லாம், அதுவும் மாண்புமிகு முதல்வர் கலைஞர், என்று அடைமொழி கூட மாற்றாமல் வெளியிட வேண்டுமா?

தமிழக முதல்வர் என்று எழுதினாலே செய்தி அறிக்கைகளுக்குப் போதுமானது

Thamizhan said...

ஜெகத்குரு சங்கராச்சாரிய சுவாமிகாள் என்று கொலைகாரரை அழைப்போருக்கு மாண்புமிகு முதல்வர் கலைஞர் என்றால் கசக்கின்றது.பாவம்.இந்து பெரியார் ஈ.வெ.ரா என்று எழுதுகிறது ஆனால் பொய்மலருக்கு இன்னும் ஈ.வெ.ராமசாமி தான்.பெற்ற தாயையே வாடி போடி என்பவர்கட்கு வக்கிரம் வேறே.

Boston Bala said...

கட்/பேஸ்ட் வேலை என்பதால் இப்படி ஆகிவிட்டது இரவி. இரண்டாம் பகுதியை கொஞ்சம் மாற்றியிருந்தேன்.

நிவாரண நிதியில் இருந்து எவர் வேண்டுமானாலும் உதவி கோரலாமா? யாருக்குத் தரலாம், எவருக்கு எவ்வளவு என்பதை எப்படி நிர்ணயிக்கிறார்கள்? இது போல் சில கேள்விகள் எழுந்ததும், இந்தப் பதிவை பலர் பார்வைக்கு இட்டதற்கு காரணம்.

-o❢o-

b r e a k i n g   n e w s...