.

Sunday, March 18, 2007

விவசாய செய்திகள்: கரும்பு அரவை துவங்கியது


அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் இன்று கரும்பு அரவை துவங்கியது. இயந்திரத்தில் கரும்புகளை போட்டு விவசாயிகள் அரவையை துவக்கி வைத்தனர். உள்படம்: கிரேன் மூலம் அரவை இயந்திரத்தில் கரும்புகட்டுகள் போடப்படுகின்றன.

உடுமலை அருகே கிருஷ்ணாபுரத்தில் அமராவதி கூட்டுறவு சர்க்கரை ஆலை உள்ளது. உடுமலை, ஆலைப்பகுதி, குமரலிங்கம், கணியூர், பல்லடம், பழனி கிழக்கு, பழனி மேற்கு, நெய்க்காரப்பட்டி ஆகிய 8 கோட்டங்களைச் சேர்ந்த கரும்பு விவசாயிகள் ஆலைக்கு கரும்பு அனுப்புகின்றனர். இந்தாண்டு 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. கரும்பு அறுவடை கடந்த மாதம் இறுதி முதல் துவங்கியுள்ளது. 6 மாதத்துக்குத் தொடர்ந்து அறுவடை நடக்கிறது.

அமராவதி சர்க்கலை ஆலையில் 2006 - 2007ம் ஆண்டுக்கான அரவைப்பட்டத்தில் 2.60 லட்சம் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக பாய்லர் இளஞ்சூடேற்றும் பணி கடந்த 9ம் தேதி துவங்கியது.

இன்று காலை 8 மணிக்கு சிறப்பு பூஜைகளுடன் அரவை துவங்கியது. அக்டோபர் வரை அரவை நடைபெறும். நிகழ்ச்சியில் ஆலை தனி அலுவலர் ஜெய்சிங் செல்வராஜ், தலைமை அலுவலர் திருஞானசம்பந்தம், கரும்பு பயிரிடுவோர் சங்க தலைவர் வேலுசாமி மற்றும் ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனர்.

- மாலை முரசு

1 comment:

சிவபாலன் said...

இந்த முறை கரும்பு கொள்முதலில் விலை நிர்ணயம் எவ்வளவு என தெரியவில்லை. அதில் எந்த பிரச்சனையும் இல்லையா?

பொதுவாக விலை நிர்ணயத்தில் பிரச்சனை இருக்கும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...