.

Wednesday, March 7, 2007

உலக கோப்பை தரவரிசை: ஆஸி. முதலிடம்

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்கென்று தனியாக அணிகளின் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது.

ஆஸ்திரேலியாவுக்கு முதல் இடம் வழங்கப்பட்டு உள்ளது. இலங்கை அணி 2-வது இடத்திலும், நியூசிலாந்து 3-வது இடத்திலும், பாகிஸ்தான் அணி 4-வது இடத்திலும் உள்ளன.

தென்ஆப்பிரிக்க அணிக்கு 5-வது இடம் வழங்கப்பட்டு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் 6-வது இடத்திலும், இங்கிலாந்து அணி 7-வது இடத்திலும் உள்ளன. இந்தியாவுக்கு 8-வது இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது. ஜிம்பாப்வே 9-வது இடத்திலும், கென்யா 10-வது இடத்திலும், பங்களாதேஷ் 11-வது இடத்திலும் உள்ளன. இது இந்த போட்டிக்கு மட்டுமே பொருந்தும்.

MSN - TAMIL

10 comments:

மணிகண்டன் said...

அதிர்ச்சியும் ஆச்சரியமும் நிறைந்த தகவல் தான். நடப்பு ஒருநாள் தரவரிசைப்படி இந்தியா இலங்கைக்கு மேல இருக்கு. ஆனாலும் இந்தியா 'B2'வாகத்தான் சூப்பர் 8க்கு போகும்னு போட்டிருந்தப்பவே எல்லா தளங்களிலும் தேடினேன். இதற்கான சரியான காரணம் எங்கேயும் இல்ல. இப்ப இந்தியாவுக்கு 8வது இடம்னு பார்க்கும் பொழுது அதிர்ச்சியா இருக்கு.

மணிகண்டன் said...

இன்னொரு ஆச்சரியம் இன்றைய போட்டியின் ஸ்கோர்கார்ட்

இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன் எடுத்திருக்கு, கும்ப்ளெயும் பதானும் அவுட்டாகாம இருந்திருக்காங்க. அவுட்டான் 9 பேர் ஷேவாக்,உத்தப்பா,கங்கூலி,திராவிட்,சச்சின்,டோனி,யுவராஜ்,கார்த்திக்,ஹர்பஜன். இதில ஸ்ரீசாந்தும், முனாஃப் படேலும் இல்லை. ஆனா இவங்க ரெண்டு பேரும் பந்து வீசியிருக்காங்கா!

இது எப்படி? பயிற்சி போட்டிகளுக்கான சிறப்பு சலுகையா?

சிவபாலன் said...

மணிகண்டன்

ஆச்சர்யமாக இருக்கு...

எதனால் என்று கொஞ்சம் தேடி பார்த்து சொல்லுங்க..

மணிகண்டன் said...

கண்டிபிடிச்சுட்டேங்க..

இந்த பக்கத்துல இருக்க தகவலை கீழே Paste பண்ணியிருக்கேன் பாருங்க
http://www.ecb.co.uk/news/world/icc-table-provides-basis,3325,EN.html

//Australia, England, India and West Indies were pre-seeded into separate groups in July 2004 to ensure that transport, accommodation and other logistical issues in West Indies could be effectively managed.

Subject to this pre-seeding, the 11 teams with current one-day international status will be seeded in the four ICC Cricket World Cup groups according to their official position in the LG ICC ODI Championship on 1 April 2005.

//

அதன்படி 2005 ஏப்ரல் 1ம் தேதி பட்டியல் கீழே

ICC One-Day International Championship Table [ as at end of March 2005 ] Team Rating
1 Australia 140
2 Sri Lanka 117
3 New Zealand 116
4 Pakistan 109
5 South Africa 107
6 West Indies 105
7 England 103
8 India 98
9 Zimbabwe 50
10 Kenya 26
11 Bangladesh 11


இப்போ சரியா?

மணிகண்டன் said...

//இன்னொரு ஆச்சரியம் இன்றைய போட்டியின் ஸ்கோர்கார்ட்

இந்தியா 9 விக்கெட் இழப்பிற்கு 300 ரன் எடுத்திருக்கு, கும்ப்ளெயும் பதானும் அவுட்டாகாம இருந்திருக்காங்க. அவுட்டான் 9 பேர் ஷேவாக்,உத்தப்பா,கங்கூலி,திராவிட்,சச்சின்,டோனி,யுவராஜ்,கார்த்திக்,ஹர்பஜன். இதில ஸ்ரீசாந்தும், முனாஃப் படேலும் இல்லை. ஆனா இவங்க ரெண்டு பேரும் பந்து வீசியிருக்காங்கா!

இது எப்படி? பயிற்சி போட்டிகளுக்கான சிறப்பு சலுகையா?

//

இதற்கான பதில் இங்கே

The warm-up matches will not be classified as ODI's by the International Cricket Council,[1] and playing regulations will be different from standard internationals in order to allow teams to experiment. Specifically, 13 players can contest a match with 11 batting, and 11 fielding at any one time[2].

http://en.wikipedia.org/wiki/2007_Cricket_World_Cup_warm-up_matches

Vasantham said...

//
இது எப்படி? பயிற்சி போட்டிகளுக்கான சிறப்பு சலுகையா?
//

நம்மலாம்...
இந்தியா ஸ்கோர் என்ன, கங்கூலி,திராவிட்,சச்சின் ஸ்கோர் என்ன...
யிச்சோமா இல்லையா-னு பாக்கிற கோஷ்டி..

ரொம்ப ணுக்கமா பார்த்து சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு சபாஷ்.

Boston Bala said...

---ரொம்ப நுணுக்கமா பார்த்து சொன்னதுக்கு உங்களுக்கு ஒரு சபாஷ்.---

அதே! கிரிக்கெட் மேல் ஆசையைக் கிளப்ப வைக்கறீங்க... இருந்தாலும்:

---இந்தியாவுக்கு 8-வது இடம் கொடுக்கப்பட்டு இருக்கிறது---

தலை பத்தில் நிறைய வீரர்கள் இருந்தும், மிகவும் அதிகமாக தோற்கும் அணி?

மணிகண்டன் said...

நன்றி வசந்தம் மற்றும் பாலா!

மணிகண்டன் said...

//தலை பத்தில் நிறைய வீரர்கள் இருந்தும், மிகவும் அதிகமாக தோற்கும் அணி?
//

அதிகமா ஜெயிக்காத அணினு சொல்லலாமே :))

சிவபாலன் said...

மணிகண்டன்

கலக்கிடீங்க.. சூப்பர்...

மிக அழகாக விளக்கம் கொடுத்துள்ளீர்கள்..

நன்றி

-o❢o-

b r e a k i n g   n e w s...