.

Wednesday, April 11, 2007

ச: 2010ல் ஐ.டி. துறையின் மொத்த ஊழியர்களில் பெண்கள் 50%

பெங்களூர், ஏப். 11: பெண்களை வேலைக்குச் சேர்த்துக் கொள்வதை விரும்பும் தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள், விடுமுறை, குழந்தை பராமரிப்பு, வீட்டருகே அலுவலகம் என சலுகைகளையும் கொட்டித் தருகின்றன.

ஐ.டி. நிறுவனங்களில் நாட்டிலேயே அதிக ஊழியர்களைக் கொண்டது டாடா கன்சல்டன்சி. அதன் 88 ஆயிரம் ஊழியர்களில் 25 சதவீதம் பெண்கள். இது ஓராண்டு முன்பு 21 சதவீதமாக இருந்தது. இப்போது பெண் ஊழியர்களின் எண்ணிக்கையை மேலும் உயர்த்தப் போகிறது டிசிஎஸ்.

அடிக்கடி வேலை மாறாதது, வேலை நேரம் வீணாகாதது மட்டுமின்றி ஐ.டி. நிறுவனங்கள் விரும்பும் திறமைகளும் பெண்களிடம் இருப்பதே, அவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகரிக்க காரணம். திறமையான பெண் ஊழியர்களை வேலை யில் தக்க வைத்துக் கொள்ள புதுமையான சலுகைகளை அளிக்கிறோம். அதிகபட்சம் 2 ஆண்டு விடுமுறை எடுத்து விட்டு, பிறகு அதே பணியில் சேரலாம் என்றார் டிசிஎஸ் மனித வள பிரிவு தலைவர் பத்மநாபன்.
Ôலேடீஸ் ஸ்பெஷல்Õ என்ற பெயரில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாமை டெக் மந்திரா நிறுவனம் அடிக்கடி நடத்துகிறது. தனது பெண் ஊழியர்களில் கர்ப்பிணிகள், குழந்தை பெற்றவர்களுக்கு உதவ, பெங்களூரில் சாட்டிலைட் அலுவலகங்களை இன்போசிஸ் அமைத்துள்ளது.

இதன்மூலம், நீண்ட தூர பயணத்தைத் தவிர்த்து, அவரவர் வீட்டின் அருகே உள்ள அலுவலகத்தில் பணியாற்றலாம். ஐபிஎம் நிறுவனம் ஏற்கனவே பெண் ஊழியர்களின் குழந்தைகளைப் பார்த்துக் கொள்ள அலுவலகத்தை ஒட்டி காப்பகம் அமைத்துள்ளது. வேலையின் இடையே அதிகநேரம் வரை குழந்தைகளை சந்திக்க அனுமதித்துள்ளது.
இதற்கிடையே, 2010ம் ஆண்டில் ஐ.டி. துறையின் மொத்த ஊழியர்களில் பெண்கள் எண்ணிக்கை பாதியாக உயரும் என்று நாஸ்காம் கணித்துள்ளது.

தினகரன்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...