கோவை குண்டுவெடிப்பு வழக்கு விசாரணை முடிந்தது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.கோவையில் கடந்த 1998 பிப்ரவரி 14ம் தேதி 12 இடங்களில் தொடர்ச்சியாக குண்டுகள் வெடித்தன. இதில் பலர் பலியாகினர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்தனர். இதுதொடர்பான சம்பவங்களில் 44 வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. 181 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. கடந்த 2002ல் சாட்சிகள் விசாரணை தொடங்கியது. நான்கு கட்டங்களாக நீதிமன்றத்தில் வாதம் நடந்தது.எதிர்தரப்பு வழக்கறிஞர்களின் வாதம் கடந்த 30ம் தேதி முடிந்தது. இதையடுத்து இந்த வழக்கு விசாரணை தற்போது முடிவடைந்துள்ளது. தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
1 comment:
மத்தியில் உபா(யாருப்பா இப்படி பேர் வச்சது?) ஆட்சியும், தமிழகத்தில் தானைத் தலைவர் ஆட்சியும் நடப்பதால் தீர்ப்பு இப்படித் தான் வரும்.
"... போதிய ஆதாரங்கள் இன்மையால், கோவை குண்டு வெடிப்பிற்கு காரணம் என வழக்கு தொடரப்பட்டவர்கள் அனைவரும் விடுதலை செய்யப் படுகின்றனர். காவல்துறை விரைந்து செயல்பட்டு உண்மைக் குற்றவாளிகளை கண்டுபிடிக்கப் பணிக்கப் பெறுவர். இன்னும் ஒரு படி மேலே போய், கோவை மக்கள் தங்களுக்கு தாமே குண்டு வைத்துக் கொண்டு, சிறுபான்மையினரின் மேல் அபாண்டமாக பழி சுமத்தி விட்டனர்" என்று தீர்ப்பு வந்தாலும் வரும்.
Post a Comment