ஜெய்ப்பூர், ஏப். 27: பொது நிகழ்ச்சியில், இந்தி நடிகை ஷில்பா ஷெட்டிக்கு முத்தம் கொடுத்த, ஹாலிவுட் நடிகர் ரிச்சர்ட் கெரியை கைது செய்யும்படி ஜெய்ப்பூர் நகர நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. மேலும் நடிகை ஷில்பா ஷெட்டியை வரும் மே 5-ம் தேதி நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பொது இடத்தில் செக்ஸ் உணர்வுகளை தூண்டும் விதமாக இருவரும் நடந்துகொண்டதால் இந்திய குற்றவியல் சட்டப்படி அவர்களை தண்டிக்க வேண்டுமென ஜெய்ப்பூர் நகரைச் சேர்ந்த பூணம் சந்த் பண்டாரி என்பவர் பொது நலன் வழக்கு தொடர்ந்தார்.
இவ்வழக்கை ஜெய்ப்பூர் கூடுதல் முதன்மை மாஜிஸ்திரேட் தினேஷ் குப்தா, வியாழக்கிழமை விசாரித்தார். இதுதொடர்பான விடியோ காட்சிகளை பார்வையிட்ட அவர், இச்செயல் எல்லை மீறியது; சமூகத்தை தவறான பாதைக்கு இட்டுச் செல்லக்கூடியது என்றார். மேலும், கெரியின் அரவணைப்பில் இருந்து விடுவித்துக் கொள்ளாமல் ஒத்துழைப்பு அளித்ததன் மூலம் ஷில்பா ஷெட்டியும் குற்றவாளியாகிறார் என்றார் நீதிபதி.
பொது இடத்தில் இருவரும் நாகரீகம் இல்லாமல் நடந்து கொண்டதாக, இதற்கு பலத்த எதிர்ப்பு கிளம்பியது. தில்லி, மும்பை, வாராணசி, போபால், கான்பூர், இந்தூர் ஆகிய நகரங்களில் பெரும்பாலும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்தோர் இருவரின் உருவ பொம்மைகளை தீயிட்டு கொளுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.
Dinamani
Saturday, April 28, 2007
எய்ட்ஸ் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் ஷில்பாவுக்கு முத்தம் கொடுத்த ஹாலிவுட் நடிகருக்கு கைது வாரண்ட்
Labels:
இந்தியா,
சட்டம் - நீதி,
சமூகம்,
வித்தியாசமானவை
Posted by Boston Bala at 12:11 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
3 comments:
http://sinnakuddy1.blogspot.com/2007/04/blog-post_05.html
இல்லி சொல்ப நோடு குரு!!
இன்னா பாலா! தொப்புளில பம்பரம் விட்ட பரம்பரை. முத்தமா அது எத்தனை வகை என்டு உலகத்துக்கு கத்துக் கொடுத்தது நம்ம சினிமா. நீதிபதி சுத்த விபரம் புரியாத ஆசாமி போல. நம்ம சினிமா பார்க்காத பயல் எல்லாம் நீதிபதி.
புள்ளிராஜா
screw India...
My two balls to the judge.
Post a Comment