உலக கோப்பை இறுதிப் போட்டி : ஆஸ்திரேலியா டாஸ் வென்று முதலில் பேட் செய்ய முடிவு; 38 ஒவராக குறைப்பு
பார்படாஸ் : உலக மக்கள் பெரிதும் எதிர்பார்க்கும் உலக கோப்பை இறுதிப் போட்டி வெஸ்ட் இண்டீசின் பார்படாஸ் நகரில் நடைபெறவிருக்கிறது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தேர்வு செய்துள்ளது. மழையால் ஆட்டம் துவங்குவது தாமதப்பட்டுள்ளது. இந்திய நேரப்படி இரவு 0945 மணிக்கு ஆட்டம் துவங்கும்; மழை காரணமாக ஆட்டம் 38 ஒவராக குறைக்கப்பட்டுள்ளது. உலகப் புகழ் பெற்ற ஆஸி., வீரர் மெக்ராத் மற்றும் இலங்கை வீரர் அர்னால்ட் ஆகிய இருவருக்கும் இது கடைசி போட்டி ஆகும்.
=தினமலர்
Saturday, April 28, 2007
சற்றுமுன்: உலகக்கோப்பை இறுதிப் போட்டி: ஆஸ்திரேலியா x இலங்கை
Labels:
கிரிக்கெட்
Posted by ✪சிந்தாநதி at 8:27 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
21 comments:
ஆடம் கிறிஸ்ட், மாத்யூ ஹைடன் ஆடிக்கொண்டிருக்கின்றனர்.
8 ஓவர் முடிவில் ஆஸ்திரேலியா 37 ஓட்டங்கள் பெற்றுள்ளது.
10/46
11/62
ஆடம் கிறிஸ்ட் அரை சதம்
15/67
ஆன்லைன் ரசிகர்கள் தொடரலாம்
தேநீர் இடைவேளை 19/135
20/137
20/143
ஆடம் சதமடித்தார்.
72 பந்துகளில் 100
இரு அணிகள் குறித்த ஒரு (தட்ஸ்தமிழ்) அலசல் ...
தர வரிசையில் ஆஸ்திரேலியா முதலிடத்திலும், இலங்கை நான்காவது இடத்திலும் உள்ளன.
இரு அணிகளும் இதுவரை 63 ஒரு நாள் போட்டிகளில் விளையாடியுள்ளன. அதில் ஆஸ்திரேலியாவுக்கு 42 வெற்றிகளும், இலங்கைக்கு 19 வெற்றிகளும் கிடைத்துள்ளன.
உலகக் கோப்பையில் இரு அணிகளும் 6 போட்டிகளில் சந்தித்துள்ளன. ஐந்தில் ஆஸ்திரேலியாவும், ஒன்றில் இலங்கையும் வென்றுள்ளன.
நடப்பு உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலியா லீக் சுற்றில், ஸ்காட்லாந்து, நெதர்லநாது, தென் ஆப்பிரிக்கா ஆகிய அணிகளையும், சூப்பர் 8 சுற்றில், மேற்கு இந்தியத் தீவுகள், வங்கதேசம், இங்கிலாந்து, அயர்லாந்து, இலங்கை, நியூசிலாந்து, அரை இறுதியில் தென் ஆப்பிரிக்காவையும் வீழ்த்தி அட்டகாசமாக இறுதிக்குள் நுழைந்துள்ளது.
இலங்கை லீக் சுற்றில், பெர்முடா, வங்கதேசம், இந்தியாவையும், சூப்பர் எட்டு சுற்றில் மேற்கு இந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நியூசிலாந்து, அயர்லாந்து அணிகளை வீழ்த்தியும், தென் ஆப்பிரிக்கா, ஆஸ்திரேலியாவிடம் தோற்றும், அரை இறுதியில், நியூசிலாந்தை வீழ்த்தியும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்துள்ளது.
2007- உலகக் கோப்பையில் ஆஸ்திரேலியாவின் டாப் ஸ்கோர்:
தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் 6 விக்கெட் இழப்புக்கு 377 ரன்கள் எடுத்ததே அதிகபட்ச ஸ்கோர்.
பெரிய அளவிலான வெற்றி - நெதர்லாந்தை 229 ரன்களில் வீழ்த்தியது.
வங்கதேசத்தை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதிக ரன்கள் எடுத்தவர் - மாத்யூ ஹைடன் (621).
அதிக விக்கெட்டுகள் - மெக்கிராத் (25).
இலங்கையின் டாப் ஸ்கோர்:
அதிகபட்ச டோட்டல் - பெர்முடாவுக்கு எதிராக 321 ரன்கள் எடுத்தது.
பெரிய வெற்றி - பெர்முடாவை 243 ரன்களில் வீழ்த்தியது.
அதிக ரன்கள் எடுத்தவர் - ஜெயவர்த்தனே (529).
அதிக விக்கெட்டுகள் - முத்தையா முரளீதரன் (23).
என்னத்த சொல்றது ஏற்கனவே game oneside ஆகிவிட்டது. ஆஸி டீம்ல காத்துகிட்டு இருக்காங்க டேய் நீ அடிச்சது போதும் நான் கொஞ்ச நேரம் அடிக்கிறேன் அப்படின்னு ஒன்னும் தேறாது போல தெரியுது.
ஆஸ்திரேலியா அபார ஆட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். முப்பது ஓவர்களில், ஒரு விக்கட் இழப்பிற்கு 222 ரன்கள் எடுத்திருக்கின்றது. ஓவருக்கு ஏழு ரன்கள்+ என்ற விகிதத்தில் இருக்கிறது. இன்னும் எட்டு ஓவர்கள் பாக்கியுள்ள நிலையில், ஸ்கோர் முன்னூறைத் தாண்டும்.
இலங்கைக்கு மிகக் கடினமாகவே இருக்கும் என்று தோன்றுகிறது.
ஒரு வழியா கில்கிரிஸ்டு அவுட். கைப்புள்ளைய (srilanka) ஆட்டோவுல ஏத்தி சைமண்ட்ஸ் ஏரியாவுக்கு அனுப்புறாங்க. பாக்கலாம் அவன் எம்முட்டு நேரம் அடிக்கறான் அப்படின்னு.
பாண்டிங்க அவுட் அடுத்து வாட்ஸன் வந்து இருக்காரு.
ஸ்ரீலங்கா, திடமான ஆட்டம். முயற்சித் திருவினை ஆக்குமா?
Srilanka to have...169 is the par Duckworth Lewis score...and they're some way behind it. Incidentally, there is just an hour of daylight left, too
மழை நிறுத்துகிறது ஆட்டத்தை? யாருக்குச் சாதகமோ?
ஆஸ்திரேலியாவுக்குத்தான் பேவரபிலா இருக்கு..
revised target to win 269. Req rr 10+ wick avl 6
ஸ்ரீலங்கா, தோல்வியை நோக்கி..ஆனா டீசண்டான தோல்வி :)
என்னாங்கடா..போறீங்க..வாறீங்க..ஜெயிச்சாச்சுன்னு சொல்லுங்களேண்டா
Post a Comment