.

Monday, May 21, 2007

ச:கலைஞர் டி.வி உதயமாகிறது?

முதல்வர் கருணாநிதி பெயரில் புதிய டிவி சேனலை, ராஜ் டிவி மூலமாக தொடங்க திமுக திட்டமிட்டுள்ளது. இதன் ஒளிபரப்பு ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும் என்று தெரிகிறது.

இதுகுறித்து ராஜ் டிவி தலைவர் ராஜேந்திரன் கூறுகையில், திமுகவும், ராஜ் டிவியும் இணைந்து வெகு விரைவில் ஒரு புதிய சேனலை ஆரம்பிக்கவுள்ளன. கலைஞர் டிவி என பெயரிடப்பட்டுள்ள இந்த டிவி ஜூன் 3ம் தேதி முதல் தொடங்கும். கலைஞரின் வழிகாட்டுதலின் பேரில் இந்த சேனல் உருவாக்கப்பட்டுள்ளது. இது உலக மக்களை கவரும் முன்னணி சேனலாக இருக்கும் என்றார்.

தாட்ஸ்தமிழ்

3 comments:

ப்ரியன் said...

'Kalaignar TV' to take on Sun Network
Monday - May 21, 2007
Televisionpoint.com Correspondent
The gulf between DMK, the ruling party of Tamil Nadu and former Union minister Dayanidhi Maran's family widened further with the party leadership joining hands with Raj TV, a rival of the Maran-owned Sun TV, to launch a new satellite channel 'Kalaignar TV'.

"We will launch the channel soon, but not on June 3, which falls on the 85th birth day of chief minister M Karunanidhi," Raj TV managing director M. Rajendran said. Raj TV sources confirmed that the party leadership was involved in the project, but would not give details on the funding pattern or on the agreement with the channel.

Rajendran, besides Raj TV, he runs Raj Digital plus and Vissa TV along with his brothers M Rajaratnam, M Ravindran and M Raghunathan, all based at Chennai.

"The new channel will feature news bulletins, movies, serials and even astrology. It will be a wholesome entertainment channel," Rajendran explained.

Claiming that the channel would adopt a neutral stand on all issues, Rajendran denied that the DMK was funding the project to take on the Sun TV. He also denied that he had met the chief minister immediately after the tussle between the DMK leadership and the Maran brothers broke out. Rajendran said every thing including the teleport for direct news telecast was ready for the launch of the channel.

"We have applied for all the facilities and software including teleport for direct uplinking and have got everything now," said Rajendran who had a troubled time when Dayanidhi Maran was heading the IT and communication ministry. Raj TV was forced to go off air for one day after its teleport licence was cancelled.

The allegation against the TV channel was that it had failed to renew the teleport licence. Moreover, the channel was charged with obtaining uplinking licence for two channels but running a series of channels. The OB van imported by the news channel was also impounded by the customs officials on charges of violation of rules. A series of actions against the channel had forced it to telecast all its programmes from Thailand.

Source : http://www.televisionpoint.com/news2007/newsfullstory.php?id=1179734000

உண்மைத்தமிழன் said...

வரும் 15 முதல் புதிதாகப் பணியில் சேர்பவர்களுக்கு அப்பாயிண்ட்மெண்ட் ஆர்டர் தரப்படும் என்று சொல்லப்பட்டுள்ளது.

அனைத்து டிவிக்களிலும் இருந்தும் தாவுவதற்கு இளைஞர்கள் தயார். சிலர் தாவியும் விட்டார்கள்.

வருகின்ற அனைவருக்கும் சம்பளம் டபுள் மடங்கு என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஆகும் செலவுகளுக்கு நான் பொறுப்பு என்று 'தளபதி' உத்தரவாதமளித்துள்ளார்.

சன் டிவி மாடியை காலி செய்தவுடன் அதே டத்தில் கலைஞர் டிவி வந்துவிடும். இந்த டத்திற்கு கலைஞர் டிவி வரும்வரை டிவியின் நேரடி நிர்வாகம் ராஜ் டிவி வசம் இருக்கும்.

அதுவரைக்கும் ராஜ் டிவியில் உட்கார்ந்து நிர்வாகம் செய்யப் போவது இன்னொரு நிதி.. தளபதியின் மகன் உதயநிதி.

இது என் காதுக்கு வந்த செய்திகள். அவ்வளவுதான்..

உண்மைத்தமிழன் said...

ஆகஸ்ட்-15 உதயம் என்று கலைஞரே செய்தியை வெளியிட்டுள்ளார்.

கூடவே சன் டிவியை வெளியேற்றும்படி நாங்கள் சொல்லவில்லை. அவர்களாகச் செல்வார்களா என்பதும் எனக்குத் தெரியாது என்று தன் அரசியல் பகைவர்களுக்கு 'நண்டுப்பிடி வலை விரிக்கும் யுக்தியை' இன்றைக்குத் தான் வளர்த்த பேரன்களுக்கும் விரிக்கும் துர்ப்பாக்கியம் கலைஞருக்கு ஏற்பட்டுள்ளது.

கூடவே அந்த டிவியை தி.மு.க. நிர்வகிக்காது என்றும் சொல்லியுள்ளார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...