.

Saturday, May 19, 2007

பிகார்: ரயில்வே அதிகாரியால் ரயிலிலிருந்து தூக்கி வீசப்பட்ட பயணி

பாட்னா, மே 19: பிகார் மாநிலம் சோனேபூரில் ரயில்வேப் பாதுகாப்புப் படை அதிகாரியால் ஓடும் ரயிலிலிருந்து தலித் பயணி ஒருவர் வியாழக்கிழமை தூக்கி வீசப்பட்டார்.

அமர்பலி எக்ஸ்பிரஸில் டிக்கட் பரிசோதனையின்போது ரயில்வேப் பாதுகாப்புப் படை அதிகாரிக்கும், பயணிகளுக்கும் இடையே பிரச்சினை நடந்துள்ளது. இதில் ராகேஷ் குமார் பாஸ்வான் என்ற தலித் பயணியை ஓடும் ரயிலிலிருந்து சோனேபூர் ரயில்வே பாலம் அருகே பாதுகாப்புப் படை அதிகாரி தூக்கி வீசியதாக மத்திய கிழக்கு ரயில்வே துணை பொது மேலாளர் கே. சந்திரா தெரிவித்தார்.

பாஸ்வான் சாபூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் சோனேபூர் ரயில்வே மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். கை, கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டு பலத்த காயம் அடைந்துள்ளார் பாஸ்வான்.

Dinamani

2 comments:

Sundar Padmanaban said...

தூக்கியெறியப்பட்டது ஒரு பயணி. அவர் தலித்தாக இருந்தால் என்ன, யாராக இருந்தால் என்ன? - சக மனிதனுக்கு இக்காரியத்தைச் செய்தவர்கள் மிருகத்தனமானவர்கள். அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து விரைவில் தண்டிக்கப்பட வேண்டும்.

எனது கண்டனங்கள்!

வடுவூர் குமார் said...

பீகாரிலா?
கண்டனம் சொன்னாக்கூட பிரயோஜனம் இல்லை.
திருந்த இன்னும் பல வருடங்கள் ஆகும்.

-o❢o-

b r e a k i n g   n e w s...