.

Friday, June 8, 2007

'கல்விக் கொள்கையை மாற்றாவிட்டால் அரசை எதிர்த்துப் போராட்டம்': பாமக

தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் அதிகக்கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்விக் கொள்கையைத் தமிழக அரசு மாற்றாவிட்டால், பாமக கடுமையான போராட்டங்களை நடத்தும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.

பேட்டி: தமிழகத்தில் மழலையர் கல்வி முதல் உயர் கல்வி வரை, கல்வி வியாபாரம் நடக்கிறது.

தமிழக அரசு தகுந்த சட்டங்களைக் கொண்டுவந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும். அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 400 இடங்களை இந்த தனியார் கல்வி நிறுவனத்தினர் கிடைக்காமல் செய்துவிட்டனர்.

தினமணி

4 comments:

Anonymous said...

//அரசு ஒதுக்கீட்டில் மருத்துவக் கல்லூரிகளில் ஏழை மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய 400 இடங்களை இந்த தனியார் கல்வி நிறுவனத்தினர் //

மரம்வெட்டி அய்யா ஏழை மக்கள் என்று யாரைச் சொல்கிறார்.கிருமி லேயர் ஓ பி சி கும்பலையா?நல்ல காமெடிப்பா.

வெங்கட்ராமன் said...

இப்படி எதாவது அறிக்கை விட்டா தானே சற்று முன் செய்திகளிலும் மற்ற ஊடகங்களிலும் வரமுடியும்.

வாய்ச்சொல்லில் வீரரடி.

Anonymous said...

தமிழக அரசு தகுந்த சட்டங்களைக் கொண்டுவந்து நிகர்நிலைப் பல்கலைக்கழகங்களைக் கட்டுப்படுத்த வேண்டும்.

UGC and centre should do this.

நாமக்கல் சிபி said...

//தமிழகத்தில் தனியார் கல்வி நிறுவனங்களில் அதிகக்கட்டணம் வசூலிப்பதைத் தடுக்க, மாறிவரும் சூழ்நிலைக்கு ஏற்றவாறு கல்விக் கொள்கையைத் தமிழக அரசு மாற்றாவிட்டால், பாமக கடுமையான போராட்டங்களை நடத்தும் என்று அதன் நிறுவனர் ராமதாஸ் வியாழக்கிழமை தெரிவித்தார்.
//

முதல்வரோட கலந்தாலோசிச்சி ஒரு ஆக்கபூர்வமான நடவடிக்கை எடுத்து, வெற்றிகரமா கல்விக் கட்டணங்களை கட்டுப் படுத்தினா எல்லாருக்கும்
நல்லது!

-o❢o-

b r e a k i n g   n e w s...