இலங்கை உச்சநீதிமன்றம் உத்தரவு !
கொழும்பு நகரிலிருந்து தமிழர்களை வெளியேற்ற இலங்கை உச்சநீதிமன்றம் தடை விதித்துள்ளது. கொழும்பில் வசித்து வரும் தமிழர்களை அங்கிருந்து வெளியேற்றி சொந்த ஊர்களுக்கு அனுப்பும் வேலையில் கொழும்பு போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். சர்வதேச மனித உரிமைகளை மீறும் செயல் என்றும், தமிழர்களை ஒட்டுமொத்தமாக இனப்படுகொலை செய்ய இலங்கை அரசு திட்டமிட்டுள்ளதாகவும் கடும் எதிர்ப்புகள் எழுந்தன. கடந்த 2 நாட்களில் மட்டும் கொழும்பில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்த 300க்கும் மேற்பட்ட தமிழர்கள் கொழும்பிலிருந்து வெளியேற்றப்பட்டு, போர் நடந்து வரும் பகுதிகளுக்கு அனுப்பப்பட்டனர். இந்த நிலையில் கொழும்பு போலீஸாரின் நடவடிக்கையை தடுத்து நிறுத்தக் கோரி மாற்றுக் கொள்கைகளுக்கான மையம் என்ற தனியார் அமைப்பு சார்பில் இலங்கை உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், கொழும்பு போலீஸாரின் நடவடிக்கைக்கு இடைக்காலத் தடை விதித்தது.
No comments:
Post a Comment