.

Friday, June 8, 2007

'பட்டம்' வாங்கினார் பில்கேட்ஸ்!

அப்பாடா, ஒரு வழியாக, 30 வருடத்துக்கு முன்பே தான் வாங்கத்தவறிய பட்டத்தை தான் படித்த அதே கேம்பிரிட்ஜ்ஜின் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில், மைக்ரோசாஃப்ட் நிறுவனரும், உலக மகா பணக்காரருமான பில் கேட்ஸ் பெற்றுக்கொண்டார்.

ஆம், நேற்று இப்பல்கலை.யில் நிகழ்ந்த பட்டமளிப்பு விழாவொன்றில் சட்டப்படிப்பில் கவுரவ பட்டம் பில்கேட்ஸுக்கு வழங்கப்பட்டது. 51 வயதாகும் பில்கேட்ஸ், 1977ல் ஹார்வர்டில் படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறிய மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

"லேட்டா வந்தாலும் லேட்டஸ்டாக வந்து இந்தப் பட்டத்தை ஒருநாள் வாங்கிவிடுவேன் என்று நான் சொன்னேனில்லையா?" என்று குழுமியிருந்தோரிடையே இருந்த தனது தந்தையை நோக்கி சொன்ன பில்கேட்ஸ், "அடுத்த ஆண்டு தான் பணி மாற இருப்பதால் தனது சுயகுறிப்பில் (Resume)
சேர்த்துக்கொள்ள இந்தப் பட்டம் மிகவும் உதவும்" என்று ஆரவாரத்துக்கிடையே கூறினார்.

அடுத்த ஆண்டு முதல் தனது முழுநேரத்தையும் தரும காரியங்களில் செலவிட இருப்பதாக பில்கேட்ஸ் கூறியிருந்தது நினைவு கூரத்தக்கது.

மேலும்...

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...