.

Sunday, June 10, 2007

காங்கிரசால் உயிருக்கு ஆபத்து: கிறிஸ்தவ மதபோதகர் குற்றச்சாட்டால் ஆந்திரத்தில் பெரும் பதற்றம்

்ரீகாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் கிறிஸ்தவ மதபோதகர் கே.ஏ. பால். இவர், 1989-ல் அமெரிக்காவுக்கு குடிபெயர்ந்தார். இவர், கிறிஸ்தவ மத போதகராகவும், சர்வதேச அமைதிக்காகவும் தன்னார்வ அமைப்பை தொடங்கி நடத்தி வருகிறார். இதனால், ஆந்திரத்தில் பல்வேறு பகுதிகளில் நிவாரணப் பணிகளை முன்னின்று செய்துள்ளார்.

நன்கொடை கேட்டு மிரட்டல்: கடந்த 2003-ல் ஆந்திர காங்கிரஸ் வளர்ச்சி நிதிக்காக ரூ. 20 கோடி நன்கொடை அளிக்க வேண்டும் என முதல்வர் ராஜசேகர ரெட்டி தரப்பில் கேட்டதாகவும், அதை தர மறுத்ததால் தமக்கு மிரட்டல் வந்ததாகவும் பால் வெள்ளிக்கிழமை குறிப்பிட்டிருந்தார்.

மதபோதகரின் இப் பேச்சால் ஆந்திரத்தில் காங்கிரஸார் கொந்தளித்துள்ளனர். 2003-ல் மிரட்டியதாக கூறப்படுவது நம்பத்தகுந்ததல்ல. அவர் தேவையில்லாமல் சர்ச்சையை கிளப்பி விடுவதாகவும் ஆந்திர காங்கிரஸ் தலைவர்கள் குற்றம்சாட்டி உள்ளனர்.

சனிக்கிழமை விசாகப்பட்டினம் வந்த பாலை முற்றுகையிட்ட காங்கிரஸார், மன்னிப்பு கேட்க வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக பால், உடனடியாக மன்னிப்புக் கேட்கத் தவறினால் பெரும் போராட்டம் வெடிக்கும் என்றும் அவர்கள் எச்சரித்துள்ளனர்.

தினமணி

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...