சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்த அதிமுக பிரமுகர் மாரடைப்பால் சனிக்கிழமை அதிகாலையில் இறந்தார். இதையொட்டி சிறை முன்பு ஏராளமான அதிமுகவினர் கூடினர். சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரையும் விடுதலை செய்ய வேண்டும் என சிறை வளாகத்துக்குள் இருந்த கட்சியினர் வலியுறுத்தினர். இதனால் சுகுமாரன் சடலத்தை, அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்வது தாமதமானது.
சேலம் மாநகர எம்ஜிஆர் மன்ற இணைச்செயலர் எம். சுகுமாரனுக்கு (52) சனிக்கிழமை இரவு 7 மணியளவில் நெஞ்சு வலி ஏற்பட்டுள்ளது. அதிகாலை 2 மணியளவில் சுகுமாரன் திடீரென்று இறந்தார்.
சுகுமாரின் உடலை எடுத்துச் செல்ல அனுமதிக்க மாட்டோம்; உடனடியாக அவருக்குச் சரியான சிகிச்சை அளிக்கவில்லை, சிறையில் உள்ள தங்கள் அனைவரையும் விடுதலை செய்து அனுப்ப வேண்டும் என வலியுறுத்தி அங்கு அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அங்கு கூடியிருந்த அதிமுகவினரை முன்னாள் அமைச்சர் டி.எம். செல்வகணபதி அமைதிப்படுத்தினார். பின்னர் அரசு உத்தரவுப்படி, சிறையில் உள்ள அனைத்து அதிமுகவினரும் விடுதலை செய்யப்பட்டனர்.
அதிமுக புகார்: சேலம் சிறையில் இருந்த சுகுமாரனுக்கு நெஞ்சு வலி என அங்கிருந்த அதிகாரிகளிடம் தெரிவித்தும், உடனடியாக சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யவில்லை. அதனால் அவர் மரணமடைய நேர்ந்தது. இதற்குச் சிறை நிர்வாகத்தின் அலட்சியமே காரணம் என்று மாநகர அதிமுக செயலாளர் வெங்கடாசலம் புகார் கூறியுள்ளார்.
தினமணி
Sunday, June 10, 2007
சேலம் சிறையில் அதிமுக பிரமுகர் மாரடைப்பால் மரணம்
Posted by Boston Bala at 10:44 PM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
No comments:
Post a Comment