.

Sunday, June 17, 2007

புற்றுநோய் பகுப்பாய்வு: தமிழ் விஞ்ஞானியின் சாதனை!



புற்றுநோய்க்கான சாத்தியங்களை அதன் மிக ஆரம்பக்கட்டத்திலேயே-சிறிதே இரத்தம், சிறிதே சிறுநீர் வைத்து ஆராய்ந்து கண்டறிந்து விடுவதன் மூலம் பெருமளவு தடுத்துவிடமுடியும் என்று தமிழ்நாட்டைச்சேர்ந்த விஞ்ஞானி முனைவர். வ.மாசிலாமணி நிரூபித்துள்ளார். மாசிலாவின் புற்றுநோய் பகுப்பாய்வு (Masila's Cancer Diagnostics) என்று பெயரிடப்பட்டுள்ள இவ்வரிய சாதனை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தால் (Indian Council of Medical Research) அங்கிகரிக்கப்பட்டுள்ளது.

இக்கண்டுபிடிப்பு வழமையாக நடைமுறைபடுத்தப்பட்டால், வருடாவருடம் இலட்சக்கணக்கானோர் புற்றுநோய் தாக்குதலிலிருந்து தற்காத்து கொள்ள முடியும். 'தென்றல்' என்று பெயரிடப்பட்டுள்ள தனது அரசுசாரா, இலாப நோக்கமற்ற நிறுவனத்தின் மூலம் ஏழை, எளிய மக்களை கருத்தில் கொண்டு தாம் சேவையாற்றவிருப்பதாக விஞ்ஞானி மாசிலாமணி தெரிவித்துள்ளார்.


முனைவர் மாசிலாமணி தன்னுடைய கண்டுபிடிப்பை அகில இந்திய மருத்துவ ஆராய்ச்சி நிறுவனம் -டெல்லி (AIIMS - DELHI), குஜராத் புற்றுநோய் ஆராய்ச்சி நிறுவனம், அஹமதாபாத் ஆகியவற்றில் பரிசோதனைக்கு உட்படுத்தினார்.

இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தார் இச்சாதனையை அங்கிகரித்து அளித்த சான்றிதழைப் பெற்ற பின், தன்னுடைய மகனும் இளம் விஞ்ஞானியுமான இளங்கோவனுடன் குடியரசு தலைவர்
அப்துல் கலாமைச் சந்தித்து வாழ்த்துகள் பெற்றார்.

விஞ்ஞானி முனைவர் வ.மாசிலாமணி ரியாதிலுள்ள அரசர் சவூத் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணியாற்றி வருகிறார்.

MASILAMANI'S
Invention Gets Validation


ரியாத் பதிவர் பாலமுகுந்தன் இது பற்றி

6 comments:

Anonymous said...

அறிஞர் பெருமகனுக்கு வாழ்த்துகள்

- அபூ முஹம்மத்

மாசிலா said...

பொதுவாக மாசிலாமணி என பெயர் அமையப் பெற்றவர்கள் எல்லோருமே அறிவாளிகளாகத்தான் இருக்க முடியும்! ;-))))

மாசிலாவுக்கு மாசிலாவின் வாழ்த்துக்கள்.

தருமி said...

விஞ்ஞானிக்கு வாழ்த்துக்கள்

Anonymous said...

//பொதுவாக மாசிலாமணி என பெயர் அமையப் பெற்றவர்கள் எல்லோருமே அறிவாளிகளாகத்தான் இருக்க முடியும்! ;-)))) //

மாசிலா... என்று பெயரிட்டால் வாழ்த்துக்கள் பலவும் பெறமுடியும் என்றால் இனி பிறக்க போகும் நம் தமிழ் மக்கள் மாசிலா.. என்று பெயரிட்டு,.. இன்னும் பல அறிய விஞ்ஞான அற்புதம்களை நாட்டுக்கு அற்பணிக்கட்டும். மாசிலா 1, மாசிலா 2. மாசிலா 3 என்று வேண்டுமானால் வைத்துக்கொள்ளலாமே.

என்னுடைய வாழ்த்துக்களும் விஞ்ஞானி மாசிலாமணிக்கு உரித்தாகுக.

asalamone

முகவைத்தமிழன் said...

விஞ்ஞானி ஐயா மாசிலா மனி அவர்கள் ஒரு தலைசிறந்த விஞ்ஞானி மட்டுமல்ல அவர் ஒரு சிறந்த சமூக ஆர்வலரும் கூட. புற்றுநோயால் பாதிக்கப்பட்ட ஒரு தமிழக கிராமத்தை தானே தத்தெடுத்து அங்குள்ள மக்கள் அணைவருக்கும் புற்றுநோய் பரிசோதனை உட்பட அணைத்தையும் செய்வதாக உறுதியளித்தள்ளார்கள்.

இன்னும் அடுத்த மாதம் இந்த அரும் பணிக்காக தனது சொந்த செலவில் இந்தியா செல்லவும் உள்ளார்கள். இவரது இந்த பணிகள் சிறக்க வாழத்துக்கள்.

தெடர்புடைய பதிவுகளை படிக்க:

"மரணத்தை தழுவும் ஒரு முஸ்லிம் கிராமம்"

http://tmpolitics.blogspot.com/2006/07/blog-post_03.html

புற்றுநோய் - தமிழ் விஞ்ஞானியின் சாதனை

http://tmpolitics.blogspot.com/2007/06/blog-post_7654.html

நன்றி

வாசகன் said...

காட்சிக்கு எளியராகவும், கடமையில் வலியராகவுந் திகழ்கிற டாக்டர் மாசிலாமணி அவர்கள் பற்றி http://balablooms.blogspot.com/2007/06/blog-post_8535.html"> இதைப்படியுங்கள்

-o❢o-

b r e a k i n g   n e w s...