.

Sunday, July 22, 2007

நேபாளம்: மன்னர் கட்டவேண்டிய மின்கட்டணம்.

பதவி நீக்கம் செய்யப்பட்ட மன்னர் ஞானேந்திராவும், அவரது உறவினர்களும் நேபாள மின்சார ஆணையத்திற்கு ரூ. 3.6 கோடி மின்சார கட்டண பாக்கி வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நேபாளத்தில் நடந்த உள்நாட்டு கலவரம் மற்றும் போராட்டங்களை தொடர்ந்து மன்னர் ஞானேந்திரா அதிரடியாக பதவி நீக்கம் செய்யப்பட்டார். அவருக்கான மானியங்கள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன. வரும் நவம்பர் மாதம் அங்கு பொதுத் தேர்தல் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேபாள பத்திரிகை ஒன்றில் வெளியான தகவல் வருமாறு: கடந்த 2005 பிப்ரவரியில் இருந்து ஞானேந்திராவும், அவரது உறவினர்களும் நேபாள மின்சார ஆணையத்திற்கு செலுத்த வேண்டிய கட்டணத்தை செலுத்தவில்லை. கடந்த மாதம் 14ம் தேதி வரை நேபாள அரண்மனையில் மட்டும் ரூ. 2.6 கோடிக்கு கட்டண பாக்கி வைத்துள்ளனர். இளவரசர் பரசின் வீட்டிற்கான மின்சார கட்டண பாக்கி ரூ. 20 லட்சம். ஞானேந்திராவின் சகோதரர் தீரேந்திரா ஷாவின் மூன்று மகள்கள் ரூ. 20 லட்சம் பாக்கித் தொகையை செலுத்தவில்லை. இதுதவிர அவரது உறவினர்கள் பலரும் மின்சார கட்டண பாக்கி வைத்துள்ளனர். மொத்தத்தில் ஞானேந்திராவும், அவரது உறவினர்களும் ரூ. 3.6 கோடி மின்சார கட்டணம் செலுத்த வேண்டும். இவ்வாறு அந்த பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமலர்

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...