.

Friday, July 20, 2007

சென்னை விமான நிலையத்தில் ரஜினியை சூழ்ந்த ஊழியர்கள்

மீனம்பாக்கம், ஜூலை 20-
சென்னை விமான நிலையத்தில் ரஜினியை ஊழியர்கள் சூழ்ந்து கொண்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. பணிகள் பாதிக்கப்பட்டன.

நடிகர் ரஜினிகாந்த் இன்று அதிகாலை 1.45 மணிக்கு சென்னையில் இருந்து லுப்தான்சா விமானத்தில் பிராங்பார்ட் வழியாக லண்டன் செல்வதாக இருந்தார். அதற்காக அவர் நள் ளிரவு 12.30 மணிக்கு சென்னை பன்னாட்டு விமான நிலையத்துக்கு வந்தார். வழியனுப்ப அவரது மனைவி லதா உடன் வந்தார்.

ரஜினிகாந்த் ஜீன்ஸ் பேண்ட், டீ சர்ட் அணிந்து மேக்கப் இல்லாமல் இருந்ததால் முதலில் அவரை யாருக்கும் அடையாளம் தெரியவில்லை. அவருக்கு பாஸ்போர்ட், விசா மற்றும் பாதுகாப்பு சோதனைகள் நடந்து கொண் டிருந்தன. அப்போதுதான் விமான நிலையத்தில் இருந்த ஊழியர்கள் அவரை அடையாளம் தெரிந்து கொண்டனர். இதையடுத்து இந்த தகவல் காட்டுத் தீ போல் பரவியது. ரசிகர்கள் அவரை சூழ்ந்து கொண்டு ஆட்டோகிராப் வாங்குவதும், அவருடன் இணை ந்து போட்டோ எடுத்துக் கொள்வதுமாக இருந்தனர்.

ஊழியர்கள் இல்லாததால் பயணிகள் சத்தம் போட ஆரம்பித்தனர். இதன் பின்னர்தான் விமான நிலைய மேலாளருக்கு தகவல் சென்றது. அவர் உடனே முதல் மாடிக்கு ஓடினார்.
ரஜினியை சூழ்ந்து நின்றிருந்த ஊழியர்களை உடனே பணிக்கு திரும்பும்படி கூறினார். உடனே ரஜினியும், "என்னோட போட்டோ எடுக்க ஆசைப்பட்டீங்க. எடுத்தாச்சுல.
இனி போய் உங்க வேலையை பா ருங்க. அதுதான் முக்கியம்" என்றார். இதையடுத்து அனைவரும் ரஜினியை பிரிய மனம் இல்லாமல் கீழ் தளத்துக்கு வந்தனர்.

மேலும் செய்திக்கு "தமிழ் முரசு.."

7 comments:

சிவபாலன் said...

Celebrity பார்த்தால் உலகமே மறந்துவிடுகிறது. என்னமோ!

Anonymous said...

இவர்களை வேலையில் இருந்து தூக்க வேண்டும். இந்த படித்த முட்டாள்கள் இருக்கும் வரை இந்தியாவை திருத்த முடியாது.

புள்ளிராஜா

Boston Bala said...

நெதர்லாந்து சென்றிருக்கிறாராமே... தமிழ்ப்பதிவர்களை சந்திக்கும் எண்ணம் உண்டா என்று விசாரித்திருப்பார்கள் :)

சிவபாலன் said...

பாபா

தமிழ் பதிவர்களா? Ha Ha Ha..

சிவாஜிக்கு வந்த விமர்சனத்தை காட்டினால் போதும் "அய்யா சாமி ஆளை விடுங்க" என்று ஓடி விடுவார்.. Ha Ha Ha..

வெட்டிப்பயல் said...

நெதர்லாண்ட்ஸா???

ஜி.ரா, தலைவரிடம் ஆட்டோகிராப் வாங்கி அனுப்பி வைக்கவும்...

Boston Bala said...

சவுந்தரியாவின் 'சுல்தான் தி வாரியார்' என்ற அனிமேஷன் படத்திற்காக ரஜினி நெதர்லாந்து பயணம் முடிந்த பின் அமெரிக்காவுக்கும் வருகிறாராம்

G.Ragavan said...

அடக்கொடுமையே நெதர்லாந்துக்கா வந்திருக்காரு. அப்ப வெளிய கிளிய தலையக் காட்டக்கூடாது. இங்க ஆம்ஸ்டர்டாம்ல RLDன்னு ஒரு எடமிருக்கு. Red Light District. ஒரு பெரிய ஏரியாவே அதான். அங்க போனா அவரைப் பாக்கலாமான்னு தெரியலை. அப்புறம் ஹார்லெம் பக்கத்துல அம்மணக்கடற்கரை இருக்காம். அங்க போவாரான்னு தெரியலை. ம்ம்ம்ம்...இதுல என்னைய ஆட்டோகிராப்பு ஸ்டெப்கிராப்பு வாங்கச் சொல்றாரு. சிவாஜிங்குற படத்துக்கு நான் போட்ட பின்னூட்டங்கள்ளையெல்லாம் அவருக்குக் காட்டுனாப் போதும்...அட.....மேக்கப் மகிமைன்னு ஒரு பதிவிருக்கே. அதையும் காட்டனும். அத்தோட போதும் அத்தானி மண்டபவம்னு ஓடீருவாரே.

-o❢o-

b r e a k i n g   n e w s...