.

Friday, July 6, 2007

ஒரு குறிப்பிட்ட சமூகத்தை மட்டும் தீவிராவதி முத்திரை குத்தக்கூடாது - பிரதமர்

எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் தீவிரவாத முத்திரை குத்திப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது என்று பிரதமர் மன்மோகன் சிங் எச்சரித்துள்ளார். லண்டன், கிளாஸ்கோ தீவிரவாத தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்து அரசுக்கு இந்தியா முழு உதவிகளையும் செய்யும் என்றும் அவர் கூறியுள்ளார். லண்டன், கிளாஸ்கோ தீவிரவாதத் தாக்குதல் தொடர்பாக இங்கிலாந்து பிரதமர் கார்டன் பிரவுனைத் தொடர்பு கொண்டு மன்மோகன் சிங் பேசினார். அப்போது, இதுதொடர்பான விசாரணையில் இந்தியா முழு உதவிகளையும், ஒத்துழைப்பையும் வழங்கும் என்று உறுதியளித்தார். பின்னர் இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் தீவிரவாத முத்திரை குத்திப் பார்ப்பது மிகவும் ஆபத்தானது, பல சிக்கல்களை அது உருவாக்கி விடும். எந்த ஒரு சமூகத்தையும், நாட்டையும் தீவிரவாத முத்திரை குத்திப் பார்ப்பது தவறானதாகும். முஸ்லீம்கள், முஸ்லீம் அல்லாதவர்கள் என்று நாம் பிரித்துப் பார்க்கக் கூடாது. தீவிரவாதி, தீவிரவாதிதான். அவனுக்கு எந்த மதமும் கிடையாது, நாடும் கிடையாது. இந்தியாவைச் சேர்ந்த சிலர் தீவிரவாத செயலில் ஈடுபடுவதால் ஒட்டுமொத்த இந்தியர்களையும் தீவிரவாதிகள் என்று கூறி விட முடியாது. கூறவும் கூடாது. எல்லா சமூகத்திலும் சிலர் தவறான பாதையில் போகிறார்கள். இதற்கு அந்த சமூகம் காரணமில்லை, தவறான பாதையை தேர்ந்தெடுத்தவர்கள்தான் அந்தத் தவறுக்குப் பொறுப்பேற்க வேண்டும். நான் ஒரு சீக்கியர் என்பதால், தீவிரவாத முத்திரையால் எவ்வளவு பாதிப்புகள் வரும் என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துள்ளேன் என்றார் சிங்.

2 comments:

Boston Bala said...

நன்றி.

Anonymous said...

சரியான நேரத்தில், சரியாக சொன்ன சிங் பெரியவருகு ஒரு ஸ்பூன் சர்க்கரை அள்ளி கொடுக்க நினைக்கிறேன்.
வளர்க அவர் பொன்மொழி. அதே நேரத்தில் "சன் குழுமம்" தன் டிவியில் தன்னுடைய செய்தியில் அடிக்கடி ஈஸியாக தீவிரவாதி என்று உடன் முத்திரை குத்தி விடுகிறார்கள். ஏன்? அதே நேரத்தில் NDTV ன் செய்தியில் அப்படி உடந்தான் முத்திரை குத்தும் வழக்கமோ இல்லையே. இரண்டும் இந்தியாவில் தானெ உள்ளது. பகத்சிங்- பிரிட்டீஸ் காரனுக்கு தீவிரவாதியாக இருந்தான். இந்தியர்களுக்கு விடுதலைவீரனாக இருந்தான். சிங்கள மக்களுக்கும், இலங்கை ராணுவத்துக்கும் புலிகள் - தீவிரவாதிகளாகத்தான் இருக்கிறார்கள். ஆனால் நமது சன் டிவிக்கு புலிகள் தீவிரவாதிகள் இல்லை. ஏன் இந்த சன் டிவிக்கு இரட்டை வேடம். விவரம் அறிய தரவும்.

asalamone

-o❢o-

b r e a k i n g   n e w s...