.

Saturday, August 25, 2007

2010-க்குள் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர்: கோக-கோலா திட்டம்

2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் 1000 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்க கோக-கோலா குளிர்பான நிறுவனம் திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் இதுவரை 20 பள்ளிகளுக்கு சுத்தமான குடிநீர் வழங்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. 20-வது பள்ளியாக, சென்னை தரமணியில் கானகம் பகுதியில் உள்ள அட்வென்ட் நடுநிலைப் பள்ளியில் சுத்தமான குடிநீர் வழங்கும் திட்டத்தின் தொடங்க விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

இதில், கோக-கோலா நிறுவனத்தின் துணைத் தலைவர் தீபக் ஜாலி பேசியது:

தமிழகத்தில் சுத்தமான குடிநீர் இன்றி தவிக்கும் 100 பள்ளிகளைத் தேர்ந்தெடுத்து குடிநீர் வழங்கும் பணியினை மேற்கொண்டு வருகிறோம். இதற்காக, ரூ. 35 லட்சம் செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. ரோட்டரி சங்கத்துடன் இணைந்து இப்பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கானகத்தில் உள்ள அட்வென்ட் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள குடிநீர் சுத்திகரிப்பு இயந்திரத்தை சம்பந்தப்பட்ட நிறுவனமே 3 ஆண்டுகளுக்கு பராமரிக்கும்.

தமிழகத்தில் உள்ளது போன்று, மேற்குவங்க மாநிலம் கோல்கத்தாவில் 150 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. 2010-ம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள 1000 பள்ளிகளில் சுத்தமான குடிநீர் வழங்க இலக்கு நிர்ணயித்துள்ளோம் என்றார்.

தினமணி

3 comments:

Unknown said...

கோக-கோலா பள்ளிகளுக்கு தண்ணி குடுக்குதாமா? உருப்பட்ட மாதிரிதான்.. கொஞ்ச நாள் அப்புறம் எல்லாருக்கும் தண்ணி காட்ட போறானுங்க!

அக்னி சிறகு said...

அதுலையாவது பூச்சி மருந்து கலந்துடாம இருந்தா சரி. சுத்தம் பண்றோம் பேர்வழின்னு உடலுக்கு ஜீரண உருப்புகளுக்கு அத்தியாவசியமான பாக்டீரியாக்களையும் நீக்கிவிடுவதால் அதை குடிக்கும் குழந்தைகளுக்கு ஜீரணம் நிதானமாகத்தான் ஆகும். யாரேனும் சோதிக்க விரும்பினால் காய்ச்சி வடிகட்டிய அரசு கொடுக்கும் குடிநீரையும், மினரல் வாட்டர் எனப்படும் தூய்மை செய்த நீரையும் குடித்து பரீட்சை எதில் விரைவில் ஜீரணம் ஆகிறது என்று பாருங்கள்.

Anonymous said...

அவர்கள் நிறுவனத்தின் தசானி தண்ணீர் கொடுப்பார்கள். இதுவும் ஒரு நல்ல

விளம்பர உத்தியே! கோக்கினால் மற்ற உபயோகமும்
உண்டு. வாகன மின்கலத்தின் மேல் அதிகமாக மாசு
சேர்ந்து, வாகனம் கிளம்ப மறுத்தது. இன்னொரு
வாகனத்தின் மின்கலத்தின் உதவியுடன் இதை
சரி செய்யலாம் என்றாலும் இந்த அடர்த்தியான
மாசு இடைஞ்சலாக இருந்தது. எங்கோ படித்தது
நினைவுக்கு வர டயட் கோக் வாங்கி மின்கலத்தின்

மேல் ஊற்றியவுடன், என்ன வியப்பு மாசு போன

இடம் தெரியவில்லை. வண்டியும் கிளம்பி

விட்டது! அதே புத்தகத்தில் போட்டிருந்த இன்னொரு தகவல், கழிப்புச் சட்டியில் கோக்கை

ஊற வைத்துவிட்டுத் தேய்த்தால் அழுக்கு போன

இடம் தெரியாது!!//To clean a toilet: Pour a can of Coca-Cola into the toilet bowl. Let the "real thing" sit for one hour, then flush clean. The citric acid in Coke removes stains from vitreous china.//

http://members.tripod.com
/~Barefoot_Lass/cola.html

-o❢o-

b r e a k i n g   n e w s...