58 பேரை பலி கொண்ட கோவை குண்டு வெடிப்பு வழக்கில், 153 பேர் குற்றவாளிகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கான தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. கோவையில் கடந்த 1998 ஆம்ஆண்டு நடைபெற்ற குண்டுவெடிப்பு வழக்கில், கடந்த புதன்கிழமை தீர்ப்பு கூறப்பட்டது.
இதில், அல்-உம்மா இயக்கத் தலைவர்கள் பாஷா, அன்சாரி உள்பட 153 பேர் குற்றவாளிகள் என்று தனிநீதிமன்ற நீதிபதி உத்ராபதி தீர்ப்பு கூறினார். குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்படும் என்று நீதிபதி தெரிவித்திருந்தார். அதன்படி குற்றவாளிகளுக்கு தண்டனை விவரம் இன்று முதல் அறிவிக்கப்படுகிறது. இதனால் அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுப்பதற்காக கோவை உள்பட தமிழ்நாடு முழுவதும், மசூதிகளில் துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்டுள்ளனர்.
கோவை முழுவதும் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் பாதுகாப்பு காரணங்களுக்காக நேற்று முதல் மறு அறிவிப்பு வரும் வரை கோவையில் ஊர்வலம் மற்றும் பொதுக்கூட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டு இருப்பதாக மாநகர ஆணையர் காந்திராஜன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment