.

Monday, August 6, 2007

மரம் கடத்தியவருக்கு மரண தண்டனை

வடகொரியாவில் அரசால் பாதுகாக்கப்பட்ட மரங்களை வெட்டிக் கடத்தியவர் பொதுமக்கள் முன்னிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்தத் தகவலை தென்கொரிய செய்தி நிறுவனம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டது.

'வடபாம்கியாங்க் மாகாணத்தின் வடக்குப் பகுதியில் உள்ள யோன்சா என்ற கிராமத்தைச் சேர்ந்த மர வியாபாரியான மும்-ஹைக் என்பவர் வடகொரியாவில் அரசால் பாதுகாக்கப்பட்டு வந்த மரங்களை வெட்டி, சீனாவுக்குக் கடத்தியதாக புகார் எழுந்தது. விசாரணையில் அவர் மீதான குற்றச்சாட்டு உண்மை எனத் தெரிய வந்ததையடுத்து, ஜூலை 23-ம் தேதி பொதுமக்கள் முன்னிலையில் அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். மேலும் அவரது கூட்டாளிகள் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது' என அந்த செய்தியில் கூறப்பட்டுள்ளது.

மேலும், அவருக்கு நிறைவேற்றப்பட்டத் தண்டனையை பொதுமக்கள் அனைவரும் கண்டிப்பாகப் பார்க்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டதாகவும் அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1920 முதல் 1930-ம் ஆண்டு வரை வடகொரியா ஜப்பான் ஆதிக்கத்தின் கீழ் இருந்தது. அப்போது ஜப்பானின் அடக்குமுறையை எதிர்த்து சோசலிச வடகொரியாவின் நிறுவனர் எனப் போற்றப்படும் கிம் இல்-சங் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்தார்.

போராட்டத்தின் ஒரு பகுதியாக அவர், வனப்பகுதிகளில் உள்ள மரங்களில் சுதந்திர வேட்கையைத் தூண்டும் வாசகங்களை எழுதினார். நாடு சுதந்திரம் பெற்ற பிறகு அவரது வாசகங்கள் இடம்பெற்ற மரங்களை சோசலிச வடகொரியா பாதுகாத்து வந்தது. மேலும் அந்த மரங்களை 'சுலோகன் மரங்கள்' என்றும் அழைத்தது.

இந்த சுலோகன் மரங்களை வெட்டி சீனாவுக்குக் கடத்தியக் குற்றத்திற்காகத்தான் 5 பேர் தண்டிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி

Slogan tree smuggler executed in N Korea
North Korea executes "slogan tree" smuggler: report

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...