.

Tuesday, August 14, 2007

தென்காசியில் திடீர் கலவரம்.

நெல்லை மாவட்டம் தென்காசி நகர இந்து முன்னணி தலைவர் குமார் பாண்டியன் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்டார். இந்து கோவில் அருகே மசூதி கட்டக்கூடாது என்று அவர் எதிர்ப்பு தெரிவித்து வந்தார்.

இதனால் இரு தரப்பினரிடையேயும் மோதல் போக்கு உருவானது. அவ்வப் போது ஒருவரை ஒருவர் தாக்கிக் கொண்டனர். இந்த நிலையில் குமார் பாண்டியனின் தம்பி செந்தில், அவரது நண்பர் நடராஜன் வெட்டப்பட்டனர்.
இதையடுத்து எதிர் தரப்பை சேர்ந்த மைதீன் சேட்கான் என்பவர் வெட்டப்பட்டார்.
இவ்வாறு மோதல்கள் நடைபெற்று வந்த நிலையில் இன்று நடந்த சண்டையில் 6 பேர் படுகொலை செய்யப்பட்டு உள்ளனர். குமார் பாண்டியன் கொலை வழக்கில் ஜாமீனில் வெளியே வந்தவர்கள் இன்று காலை 10 மணி அளவில் தென்காசி போலீஸ் நிலையத்துக்கு 2 மோட்டார் சைக்கிளில் சென்றனர். முத்தாரம்மன் கோவில் அருகே சென்றபோது எதிர்தரப்பை சேர்ந்த சிலர் காரில் வந்தனர்.

அரிவாள் மற்றும் வெடிகுண்டுகளுடன் இறங்கிய இரு தரப்பினரும் பயங்கரமாக மோதிக் கொண்டனர். அரிவாளால் சரமாரியாக வெட்டினர். வெடிகுண்டுகளை வீசினர். ஆனால் அது வெடிக்க வில்லை.
இதில் சம்பவ இடத்திலேயே அசன் கனி (35), ரவி, சேகர் (குமார் பாண்டியனின் தம்பி) ஆகிய 3 பேர் ரத்தவெள்ளத்தில் பிண மானார்கள். படுகாயம் அடைந்த நசீர் ஆஸ்பத்திரி கொண்டு செல்லும் வழியில் இறந்தார். குமார் பாண்டியனின் தம்பி செந்தில், நாகூர்மீரான் ஆகியோர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி இறந்தனர்.
மோதலில் சையது அலி (25), அப்துல்லா (30), அபு (27), ராஜா (36), மீரான் (26) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் பாளை. அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த பயங்கர மோதலால் அப்பகுதி போர்க்களம்போல் காணப்பட்டது.
கடைகள் அடைக்கப்பட்டன வியாபாரிகளும், பொது மக்களும் பதறியடித்துக் கொண்டு ஓடினர். வீடுகளில் இருந்தனர்கள் கதவை பூட்டிக் கொண்டனர். இதுபற்றி தகவல் அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். மேலும் அசம்பாதங்கள் ஏற்படாமல் இருக்க நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
பஸ்-ஆட்டோக் களும் ஓடவில்லை. இதனால் வெளிவூர் பயணிகள் பெரிதும் அவதிப்பட்டனர்.

தென்காசி சம்பவத்தை தொடர்ந்து கடையநல்லூர் பகுதியிலும் பதட்ட மான சூழ்நிலை உரு வானது. அங்கும் பெரும்பாலான கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. இதனால் நெல்லை மாவட்டம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவம் பற்றி அறிந்ததும் நெல்லை மாவட்ட கலெக்டர் பிரகாஷ் மற்றும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீதர் ஆகியோர் தென்காசி விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டனர்.

2 comments:

Anonymous said...

I have a great doubt about in which country we r living?. The riots is first started by the HINDU terrorrist movement HINDU MUNNANI. The Government should ban this terrorrist movement immediately. if the govtment will fail to do this, there will be a great danger to the religious relationships. And also govtment should take action against the rowdies those were involved in this case. i have appreciate the job done by the adirai pudiyavan.good.

Anonymous said...

தமிழகத்தில் அல்-உம்மா மற்றும் ஹிந்து முன்னணி வகையறாக்கள் உடனடியாகத் தடை செய்யப்பட வேண்டும்.

நீதியில் பாகுபாடு கூடாது.

பம்பாய் குண்டு வெடிப்பு வழக்கில் தீர்ப்பும் தண்டனையும் தரப்பட்டதுபோல அதற்கு முந்தைய கலவர வழக்கில் ஏன் இல்லை?

இப்போதும் தஸ்லீமாவைத் தாக்கும் அராஜகம், சற்றும் குறைவில்லாததாக பால்தாக்கரேயை விமர்சித்த பத்திரிக்கை மீதான தாக்குதல்.

-o❢o-

b r e a k i n g   n e w s...