.

Tuesday, August 14, 2007

முன்னாள் தினமணி ஆசிரியர் சம்பந்தம் மறைவு

இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தில் செய்தித்துறை தலைவராகவும் தினமணி நாளிதழின் ஆசிரியராகவும் பணியாற்றிய ஆர் எம் டி சம்பந்தம் இன்று காலை தனது இல்லத்தில் காலமானார். அவருக்கு வயது 73. கடந்த மூன்று வருடங்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு இருந்தார்.

தனது இதழியல் பணியை அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ்நாடு நாளிதழில் துவங்கினார். பின் இந்தியன் எக்ச்பிரஸ் நாளிதழிற்கு மாறினார். அக்குழுமத்தின் நாளிதழான தினமணியின் ஆசீரியராகவும் பணியாற்றினார். தன் பணிக்காலத்தில் அரசியல் தலைவர்களான கு.காமராஜ், பெரியார் ஈ வெரா, அண்ணாதுரை, தற்போதைய முதல்வர் கலைஞர் கருணாநிதி ஆகியோருடன் நெருங்கிய தொடர்பு வைத்திருந்தார்.

அவரது விருப்பப்படி அவரது உடல் ஸ்ரீராமசந்திரா மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு வழங்கப்படுவதாக குடும்பத்தினர் கூறினர்.

The Hindu News Update Service

2 comments:

லக்கிலுக் said...

அன்னாரது மறைவுக்கு எனது அஞ்சலிகள்!

Thamizhan said...

அந்தக் காலத்திலேயே தமிழுக்காகவும்,தமிழர்க்காகவும் ஆரம்பிக்கப்ப்ட்ட, மதுரை கருமுத்து தியாகராயரெனும் தியாகச் செம்மலின் தமிழ்நாடு பத்திரிக்கையில் தன் பத்திரிக்கை உலகைத் தொடங்கியவர்.
பகுத்தறிவாளராகத் திகழ்ந்தவர்.
அவருடைய நாட்கள் தினமணி பத்திரிக்கையின் முத்தான நாட்கள்.தமிழ்கத்துப் பெரியவர்களைப் பற்றித் தனித்தன்மையுடன் வரலாறு எழுதி நூலாக வெளிவந்துள்ளது.

கடைசியிலும் அவரது கண்களும்,உடலும் அன்பளிக்கப் பட்டது அவரைத் தக்கார் என்ற பெருமையில் சேர்த்து விட்டது.

-o❢o-

b r e a k i n g   n e w s...