.

Friday, August 24, 2007

கபில்தேவை போல கவாஸ்கரும் தனி கிரிக்கெட் அணி

இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு போட்டியாக கபிலதேவ் இந்திய கிரிக்கெட் லீக் என்ற அமைப்பை ஏற்படுத்தி தனி அணிகளை உருவாக்குகிறார். இதில் இந்தியா மற்றும் வெளிநாட்டு வீரர்கள் இடம் பெற உள்ளனர்.

கபில்தேவுக்கு போட்டியாக முன்னாள் கேப்டன் கவாஸ்கரும் இதே போல தனி அமைப்பை ஏற்படுத்தி அணிகளை உருவாக்க உள்ளார். கவாஸ்கர் ஏற்படுத்தும் அணிக்கு இந்திய கிரிக்கெட் சங்கமே உதவியாக இருக்க முன் வந்துள்ளது. இந்த அமைப்புக்கு ப்ரொஃபஷனல் கிரிக்கெட் லீக் என்று பெயர் சூட்டி உள்ளனர்.

இந்திய கிரிக்கெட் சங்கத்தின் சார்பில் உள்ளூரில் நடக்கும் போட்டிகளில் இவர்கள் ஆடினால் குறைவான சம்பளமே கிடைத்து வந்தது.

கபில்தேவ் தொடங்கியுள்ள இந்திய கிரிக்கெட் லீக் அணியில் சேரும் வீரர்களுக்கு ரூ.60 லட்சத்தில் இருந்து ரூ.90 லட்சம் வரை சம்பளம் போடப்பட்டுள்ளது. இந்தியாவில் உள்ளூர் போட்டிகளில் ஆடி வந்த 50-க்கும் மேற்பட்ட வீரர்கள் கபில் தேவ் அணியில் சேர்ந்து விட்டனர். அவர்களிடம் 3 ஆண்டு ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

இதை தடுக்க உள்ளூர் வீரர் களுக்கு இந்திய கிரிக்கெட் சங்கமும் சம்பளத்தை உயர்த்தி உள்ளது. உள்ளூர் போட்டிகளில் வெற்றி பெறும் மற்றும் 2-வது இடம் பெறும் அணிகளுக்கான பரிசு பணமும் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி ஒரு போட்டியில் ஆட வீரருக்கு ரூ.36 ஆயிரம் வழங்கப்படும். இதற்கு முன்பு ரூ.26 ஆயிரம் வழங்கப்பட்டது.

இதன்படி வருடத்துக்கு 45 ஆட்டங்களுக்கு மேல் விளையாடும் வீரர்களுக்கு வருடத்துக்கு ரூ.16 லட்சத்து 20 ஆயிரம் கிடைக்கும். வெற்றி பெறும் அணி வீரர்களுக்கு பரிசு பணமும் தனியாக கிடைக்கும்.

இந்த வகையில் மட்டும் இந்திய கிரிக்கெட் சங்கம் ரூ.26 கோடி வரை உள்ளூர் போட்டி வீரர்களுக்கு வழங்க உள்ளது. இந்திய கிரிக்கெட் சங்கத்துக்கு கடந்த நிதி ஆண்டில் ரூ.650 கோடி வருமானம் கிடைத்து உள்ளது. முந்தைய ஆண்டு வருமானம் ரூ.430 கோடியாக இருந்தது.

வருமானத்தில் 26 சத வீதத்தை வீரர்களுக்கு வழங்கு வது. அதில் பாதியை உள்ளூர் வீரர்களுக்கு வழங்குவது என்று கிரிக்கெட் சங்கம் ஏற்கனவே முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.



மாலைமலர் : கபில்தேவ் அணியில் சேராமல் தடுக்க உள்ளூர் வீரர்களுக்கு ரூ.26 கோடி பரிசு மழை: கிரிக்கெட் சங்கம் முடிவு


Cricinfo - Newspaper reports BCCI to start its own league
IndianExpress.com :: BCCI kitty swells, pay hike likely for domestic players

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...