.

Friday, August 24, 2007

இயேசு கிறிஸ்து குறித்து வெளியிட்ட படத்துக்காக மன்னிப்பு கோரியது 'மக்கள் ஓசை'

இயேசு கிறிஸ்து அவர்கள் புகைபிடிப்பது போன்ற ஒரு படத்தை தனது முதல் பக்கத்தில் பிரசுரித்த மலேசிய தினசரி அதற்காக மன்னிப்பு கோரியுள்ளது.

மலேசியாவிலிருந்து வெளியாகும் தமிழ் தினசரியான மக்கள் ஓசையில் இந்தப் படம் வெளியானது. புனித வேதாகமத்திலிருந்து சில போதனை வரிகளுடன் இயேசு கிறிஸ்துவின் படத்தை இணையதளத்திலிருந்து இறக்கியதாக கூறும் அந்த தினசரி, அதில் இயேசு கிறிஸ்து புகைபிடிப்பது போல் அந்தப் படம் திருத்தப்பட்டிருந்ததை தமது பணியாளர்கள் கவனிக்கவில்லை எனக் கூறியுள்ளது.

இது தொடர்பில் கோலாலம்பூரிலுள்ள ரோமன் கத்தோலிக்க ஆயர் அவர்களிடம் இந்த தினசரி எழுத்து மூலமான ஒரு மன்னிப்பு கடிதத்தை அளித்துள்ளது. இவ்வாறான படத்தை வெளியிட்டது மதத்தை இழிவுபடுத்தும் ஒரு செயல் என்று ஆயர் அவர்கள் கூறியிருந்தார்.

தமிழ் பிபிசி

BBC NEWS | Asia-Pacific | Anger at Malaysia 'Jesus cartoon'
Malaysian Paper Sorry for Smoking Jesus - washingtonpost.com

3 comments:

PRABHU RAJADURAI said...

"இவ்வாறான படத்தை வெளியிட்டது மதத்தை இழிவுபடுத்தும் ஒரு செயல் என்று ஆயர் அவர்கள் கூறியிருந்தார்"

அப்படியா? ஆயர்கள் பற்றி இயேசு என்ன கூறியிருக்கிறார் என்று பைபிளை புரட்டிப் பார்க்கவும்...

இயேசுவின் காலத்தில் புகை பிடிக்கும் வழக்கம் இருந்திருந்தால், அவரும் புகை பிடித்திருக்கக் கூடிய சாத்தியக் கூறுகள் அதிகம்...

Anonymous said...

jpU. uh[Jiu mtu;fspd; Fwpg;gpidg; gbj;Njd;. me;j Fwpg;ig vOjpatu; ahu; vd;W mwpAk; Nehf;Fld; NjbaNghJ mtu; xU tf;fPy; vd;gijAk; mwpe;Jnfhz;Nld;. Mr;rupak; Vw;gltpy;iy. jdJ njhopw; jpwikia ,q;F ep&gpf;f te;Jtpl;lhu; Nghy; njupfpwJ. Fw;wthspfs; jUk; gzj;ijg; ngw;Wf;nfhz;L mtu;fspd; jtWfis epahag;gLj;jp me;j tUthapy; tapW tsu;f;Fk; xU %d;whe;ju tf;fPypd; $w;W!
tp
pl. use bamini font if anyone find difficult in reading this comment.

Boston Bala said...

மலேசிய தமிழ் நாளிதழுக்கு தடை


இயேசு கிறிஸ்து புகை பிடிப்பது போல படம் வெளியிட்ட மலேசிய தமிழ் நாளிதழ் மக்கள் ஒசைக்கு அந்நாட்டு அரசு ஒரு மாத கால தடை விதித்துள்ளது.

இந்த படம் வெளியிடப்பட்டதற்காக மக்கள் ஒசை நாளிதழ், விளக்கம் அளித்து மன்னிப்புக் கோரியிருந்தது. மேலும் உள்நாட்டில் உள்ள கிறிஸ்தவ தேவாலயத் தலைவர்களிடமும் தவறுக்கான விளக்கம் அளித்து மன்னிப்பு கோரியிருந்தது.

கிறிஸ்தவ மதத் தலைவர்கள் தமது மன்னிப்பை ஏற்றுக் கொண்டதாக மக்கள் ஒசையின் செய்தி விரிவாக்க ஆசிரியர் எம்.துரைராஜ் தெரிவிததார்.

இந்நிலையில், அரசு விதித்துள்ள தடையை எதிர்த்து மலேசியப் பிரதமர் இலாக்காவில் முறையீடு ஒன்று திங்களன்று அளிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

-o❢o-

b r e a k i n g   n e w s...