.

Friday, August 24, 2007

ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி

ஜெ. வீட்டை முற்றுகையிட முயற்சி
காங்-அதிமுக தொண்டர்கள் அடிதடி
கொடுப்பாவி எரிப்பு-2 எம்எல்ஏக்கள் கைது

ஆகஸ்ட் 24, 2007

சென்னை: அணு சக்தி ஒப்பந்த விவகாரத்தில் பிரதமர் மன்மோகன் சிங் குறித்து அவதூறாக பேசிய அதிமுக பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் வீடு முன் போராட்டம் நடத்தச் ெசன்ற காங்கிரஸாருக்கும், அதிமுகவினருக்கும் இடையே கடும் மோதல் மூண்டது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர்.

இந்த போராட்டம் தொடர்பாக 2 காங்கிரஸ் எம்.எல்.ஏக்கள் உள்பட 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்திய, அமெரிக்க அணு சக்தி ஒப்பந்தம் தொடர்பாக சமீபத்தில் ஜெயலலிதா ஒரு அறிக்கை விடுத்திருந்தார். அதில் பிரதமர் மன்மோகன் சிங்கை கடுமையாக சாடியிருந்தார். தனது மகள் மற்றும் மருமகன் ஆகியோர் வசிக்கும் அமெரிக்காவுக்கே மூட்டை முடிச்சுகளோடு கிளம்பபிப் போகட்டும் மன்மோகன் சிங் என்று கடுமையாக விமர்சித்திருந்தார்.

பிரதமர் குறித்த ஜெயலலிதாவின் விமர்சனத்தால் காங்கிரஸ் கட்சியினர் கோபமடைந்தனர். பிரதமர் குறித்துப் பேசியதற்கு மன்னிப்பு கேட்க வேண்டும் ஜெயலலிதா, இல்லாவிட்டால் அவரது வீட்டு முன் போராட்டம் நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி எச்சரித்திருந்தார்.

இந்த நிலையில் சட்டசபை காங்கிரஸ் தலைவர் சுதர்சனம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், முன்பு சோனியா காந்தி குறித்துத் தரக்குறைவாக பேசியிருந்தார் ஜெயலலிதா. இது பெரும் பூகம்பமாக வெடித்தது. அதை ஜெயலலிதா மறந்திருக்க மாட்டார்.

இந்த நிலையில் பிரதமர் குறித்தும் அவதூறாகப் பேசியுள்ளார். இதற்கு அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லாவிட்டால் சென்னை மாவட்ட காங்கிரஸ் சார்பில் அவரது வீட்டு முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்திருந்தார்.

இந்தச் சூழ்நிலையில் இன்று காலை காங்கிரஸ் தலைவர் கிருஷ்ணசாமியின் மகனும், எம்.எல்.ஏவுமான விஷ்ணு பிரசாத், எம்.எல்.ஏ அருள் அன்பரசு தலைமையில் 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் போயஸ் தோட்டத்தை நோக்கி சென்றனர்.

இதை அறிந்ததும் அதிமுக எம்.எல்.ஏக்கள் சேகர்பாபு, பதர் சையத், கலைராஜன் உள்ளிட்டோர் தலைமையில் அதிமுகவினரும் தயாராக திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. போலீஸார் அதிக அளவில் குவிக்கப்பட்டனர்.

டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையிலிருந்து ஜெயலலிதா வீடு உள்ள தெரு வளையும் இடத்தில் அதிமுகவினர் பெருமளவில் கூடி நின்றனர்.

அப்போது அங்கு காங்கிரஸார் வந்தனர். இதையடுத்து இரு தரப்பினருக்கும் இடையே பெரும் மோதல் மூண்டது.

காங்கிரஸ் தொண்டர்களை நோக்கிப் பாய்ந்த கலைராஜனும், சேகர்பாபுவும் அவர்களைப் பிடித்து தள்ளி விட்னர். இதையடுத்து அதிமுக தொண்டர்களுக்கும், காங்கிரஸாருக்கும் இடையே தள்ளுமுள்ளு நடந்தது.

அப்படியே அது அடிதடியாக மாறியது. இரு தரப்பினரும் ஒருவரை ஒருவர் அடித்தும் மிதித்தும் கொண்டனர்.

போலீஸார் பெரும் சிரமப்பட்டு இரு தரப்பினரையும் கலைத்து விட்டனர். பின்னர் ஆர்ப்பாட்டம் செய்யச் சென்ற காங்கிரஸார் கைது செய்யப்பட்னர். இந்த சம்பவத்தால் அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

ஜெ. கொடும்பாவி எரிப்பு:

முன்னதாக வட சென்னை பகுதியில் ஜெயலலிதாவின் கொடும்பாவியை காங்கிரஸ் தொண்டர்கள் கொளுத்தினர். இதையடுத்து 10க்கும் மேற்பட்டோரை போலீஸார் கைது செய்தனர்.

www.thatstamil.com

No comments:

-o❢o-

b r e a k i n g   n e w s...