கோவை வெடிகுண்டு வழக்கில் விடுதலை செய்யப்பட்ட கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானிக்கு நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று தமிழர் தேசியஇயக்கத்தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள்விடுத்துள்ளார்.
கோவை வெடிகுண்டு வழக்கில் கேரள மக்கள் ஜனநாயகக் கட்சியின் நிறுவனர் மதானி மீதான ஐந்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்படவில்லை. அவர்மீது பொய்யான குற்றம்சாட்டிய அதிகாரிகள் அவர்களுக்குப் பின்னால் இருந்து இயக்கிய அரசியல்வாதிகள் ஆகியோர் இப்போது மக்கள் மன்றத்திற்கு முன்னால் தலைகுனிந்து நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது.
பொய்வழக்கு தொடர்ந்தவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது உரிய நடவடிக்கையை தமிழக அரசு எடுக்கவேண்டும். அப்போதுதான் எதிர்காலத்தில் இதுபோன்ற பொய் வழக்குப்போடும் போக்குக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும். மதானிக்கு தகுந்த நஷ்டஈட்டை வழங்கவேண்டியது தமிழக அரசின் கடமையாகும் என்று பழ.நெடுமாறன் நேற்று வெளியிட்டுள்ள ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
5 comments:
சரியாக சொல்லியிருக்கிறார் பழ நெடுமாரன்.
அய்யா பழ.நெடுமாறனின் கோரிக்கை அவசியமானது. அதை வரவேற்கிறேன்
ஏன் மதானியோட நிறுத்தீட்டாரு? அப்படியே சரவணபவன் ராஜகோபால், மோனிகா பேடி இன்னும் கலர் டிவி கேசில் விடுதலையான ஜெயலலிதா இவங்களுக்கெல்லாம் நஷ்டஈடு வேண்டாமாம????
////அப்படியே சரவணபவன் ராஜகோபால், மோனிகா பேடி இன்னும் கலர் டிவி கேசில் விடுதலையான ஜெயலலிதா இவங்களுக்கெல்லாம் நஷ்டஈடு வேண்டாமாம????////
Two Points:
1). No Problem, We can ask for them too, if they were punished severely for a minimum of 9 years and then released!
2). Madhaani lost his health and wealth where others 'developed' them by the charges.
மதானி யாருடைய தாலியயாவது அறுத்தாரா அல்லது எவன் பொண்டாட்டிக்காவது ஆசைப்பட்டு புருசனை போட்டுத்தள்ளுனாரா? மதானியை - சரவணபவன் ராஜகோபாலோடும்- ஜெயேந்திரரோடோ-மோனிகா பேடியோடும் ஒப்பீடு செய்யாதீர்கள்.
அய்யா பழ நெடுமாறன் எதைச்சொன்னாலும் -நியாயமகத்தான் சொல்வார்..
Post a Comment