கொல்கத்தாவிலிருந்து சென்னைக்கு வந்து கொண்டிருந்த விமானத்தில் கழிப்பறைக் கதவு திறக்கப்படாமல் பூட்டப்பட்டிருந்ததால் கோபமடைந்த பயணிகள் ஓடும் விமானத்திற்குள் போராட்டத்தில் குதித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கொல்கத்தாவிலிருந்து தனியார் நிறுவன விமானம் வந்து கொண்டிருந்தது. அப்போது பயணிகள் சிலர் கழிப்பறைக்குச் சென்றனர். ஆனால் கழிப்பறை மூடப்பட்டிருந்தது. இதனால் பயணிகள் அவதிக்குள்ளாகினர்.
கழிப்பறை ஏன் மூடப்பட்டுள்ளது என்று பயணிகள் கேட்டதற்கு விமான ஊழியர்கள் சரியாக பதிலளிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் அத்தனை பயணிகளும் சேர்ந்து போராட்டத்தில் குதித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் விமானம் சென்னைக்கு வந்து சேர்ந்ததும், விமான ஊழியர்கள், ஒரு பயணியை ரகளை செய்ததாக கூறி விமான நிலைய மேலாளரிடம் ஒப்படைத்தனர். இதைப் பார்த்ததும் மற்ற பயணிகள் திரண்டு வந்து மறுபடியும் போராட்டத்தில் குதித்தனர்.
கழிப்பறைக் கதவு ஏன் மூடப்பட்டிருந்தது என்று கேட்பது குற்றமா, அதற்காக தண்டனையா என்று ஆவேசமாக கேட்டபடி மேலாளரை முற்றுகையிட்டு கோபத்துடன் பேசினர். பொறுப்பற்ற முறையில் நடந்து கொண்ட சம்பந்தப்பட்ட விமான நிறுவன ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அத்தனை பயணிகளும் கையெழுத்திட்டுப் புகார் கொடுத்தனர். இதையடுத்து சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்தின் அதிகாரிகள் வரவழைக்கப்பட்டனர். அவர்கள், நடந்த சம்பவத்திற்காக பயணிகளிடம் வருத்தம் கேட்டனர். இதுபோல இனி நடக்காது என்று உறுதியளித்தனர். இதையடுத்து பயணிகள் சமாதானமடைந்து கலைந்து சென்றனர்.
Saturday, August 4, 2007
நடுவானில் விமான பயணிகள் திடீர் போராட்டம்.
Posted by Adirai Media at 10:38 AM
Subscribe to:
Post Comments (Atom)
b r e a k i n g n e w s...
4 comments:
//பயணிகளும் கையெழுத்திட்டுப் புகார் கொடுத்தனர். // இந்த சம்பவம், நான்கு வருடங்களுக்கு முன்னர் பெங்களூர் ஏரோடிரோமில் நிகழ்ந்த ஒரு சம்பவத்தை நினைவுபடுத்துகிறது.
பெங்களுரிலிருந்து மும்பை செல்ல வேண்டிய ஒரு விமானம் பழுதடைந்ததனால், அங்கு strandedஆக இருந்த சில பயணிகளையும் ஏற்றிக்கொள்ள நாங்கள் வந்த மும்பை செல்லவேண்டிய அந்த ஏர் இந்தியா விமானம், எந்தவித முன் அறிவிப்புமின்றி யாரும் எதிர்பாராதவிதமாய், பெங்களூர் விமான நிலையத்தின் ஒரு மூலையில் (?!) தரையிரங்கியது. அதற்காக எங்கே நிறுத்தப்பட்டதோ தெரியவில்லை, விமானக் கதவு திறக்கப்பட்ட சில நிமிடங்களிலேயே, விமானம் முழுதும் கொசு ஆக்ரமித்துக்கொண்டது. பெங்களூரிலிருந்து புறப்படவேண்டிய பயணிகளும் ஏறியபாடில்லை; கதவு வேறு நீண்ட நேரமாகத் திறந்தே வைக்கப்பட்டிருந்ததால், 'கதவை மூடு, கதவை மூடு என்று' கடுப்படைந்த பயணிகள் கோஷமிடத் துவங்கினர்; கிட்டத்தட்ட முக்கால் மணிநேரம், விமான ஊழியர்களோடு போரடவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்ட பயணிகள், விமான ஊழியர்களின் மெத்தனப்போக்கைக் கண்டித்து (Air India Hijaks its one flight என்ற தொனியில்) ஒரு கையெழுத்து இயக்கத்தை நடத்தினார்கள். மும்பையில் கனெக்டர் ஃபிளைட்டைத் தவறநேரிடுமோ என்ற பதட்டத்தில் சில பயணிகளும், சென்றடையவேண்டிய இடத்திற்கு உரிய நேரத்தில் சேரமுடியாமற் போய்விடுமோ என்ற கவலையில் சிலரும் இருந்தனர். திறந்தேகிடந்த கதவின் வழியாக தொடந்து வந்து கொண்டிருந்த கொசுக்களின் தொல்லையால் உச்சக்கட்ட டெண்ஷனிற்கு ஆளானார்கள் பயணிகள். இந்த நிலையில், பயணிகளின் சூட்டைத்தணிக்க 'லிக்கர்' செர்வ் செய்யப்பட்ட கூத்தும் நடந்தது. புதிதாய் கிடைத்த ரயில் சிநேகம் (விமான சினேகம்) கைகொடுக்க, பொழுதுபோகாத பொம்முக்கள் சிலரோ அந்தாக்ஷாரியில் (பாட்டுக்குப்பாட்டு) இறங்கினார்கள். இதனிடையே, ஒரு timingகுடன் நம்ப ஆள் ஒருத்தர், சிந்து பைரவி பாடலை... அதான்..'சாராயத்த ஊத்து, சன்னலத்தான் சாத்து' என்று சிந்து பாடியது ஹைலட்டாக இருந்தது (உடனே அந்த ஆள் நானா என்று கேட்காதீர்கள்).
போராட்டத்தில தானே குதிச்சாங்க, விமானத்திலேயிருந்து குதிச்சிடலையே? ;-)
விமான கட்டண குறைப்பு கூடவே கழிப்பிடம் குறைப்புனு டிக்கெட் பின்னாடி பொடி எழுதில அந்த விமான நிறுவனம் எழுதி இருந்துச்சாம் அதை யாரும் படிக்க மறந்துடாங்கலாம்! :-))
உள்ளூர் விமானச்சேவையில் என்னென்னவோ நடக்குது.
Post a Comment