சாலைக்கு வந்த தண்னீரால் சுனாமி பீதி
சென்னை மெரீனா கடற்கரையில் திடீரென ஏற்பட்ட கடல் கொந்தளிப்பால் சாலை வரை தண்ணீர் வந்தது. இதனால் சுனாமி வருகிறதோ என்று மக்கள் பீதியடைந்தனர். கடந்த 2004ம் ஆண்டு டிசம்பர் 24ம் தேதி ஆசிய நாடுகளை சுனாமி அலைகள் புரட்டிப் போட்டன. அதன் பின்னர் அவ்வப்போது கடல் கொந்தளிப்புகளும், சீற்றங்களும், கடல் நீர் வீடுகளுக்குள் புகுவதும் அதிகரித்துள்ளன.இந்த நிலையில் நேற்று காலையில், சென்னையில் மெரீனா, திருவொற்றியூர் உள்ளிட்ட இடங்களில் திடீரென கடல் கொந்தளிப்பு ஏற்பட்டது. பெரும் சீற்றத்துடன் அலைகள் எழுந்தன. பெரும் சத்தத்துடன் பொங்கி எழுந்த அலைகளால் மக்களிடையே பெரும் பீதி எழுந்தது. சீறிப் பாய்ந்த கடல் நீர் மெரீனா கடற்கரையைத் தாண்டி சாலை வரை வந்தது. இதனால் சுனாமி வந்து விட்டது என்று மக்கள் பீதியடைந்து கடற்கரையிலிருந்து ஓடினர். ஆனால் சாதாரண கடல் கொந்தளிப்புதான் எனத் தெரிய வந்ததும் மக்கள் நிம்மதி அடைந்தனர்.
இந்த கடல் சீற்றத்தில் சிக்கி நொச்சிக்குப்பம் பகுதியில், இரு படகுகள் அடித்துச் செல்லப்பட்ன. கடல் கொந்தளிப்பால் கடல் நீர் உட் புகுந்ததால் கடற்கரை மணலில் ஆங்காங்கே குளம் போல தண்ணீர் தேங்கிக் காணப்பட்டது. இதேபோல காசிமேடு எண்ணூர், தாழங்குப்பம் உள்ளிட்ட பகுதிகளிலும் கடல் கொந்தளிப்பு காணப்பட்டது. இதனால் கடற்கரையோர மக்கள், மீனவர்கள் பீதியுடனேயே காணப்பட்டனர். ஆடிமாதத்தில் இது போன்று கடல் கொந்தளிப்பது வாடிக்கைதான் என வானிலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
1 comment:
A roaring welcome to Bloggers' camp to-morrow ?
Post a Comment